பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

கலைவாணன்


தோழி:, அரசர் அந்தப்புரம் வருவதாக அறிவிக்கச்

சொன்னார்.

குணவதி:- அரசர் இப்போது எங்கிருக்கிறார்?

தோழி: வசந்த மாளிகையில் கூத்தருடன் பேசிக் கொண்டிருந்தார். அநேகமாய் வரும் சமயந்தான்்.

குணவதி:- சரி; நீ போ.

(தோழி போகிறாள்.)

உதயணரே! இனி தாங்களும் போகலாம்.

உதயணர்: வணக்கம்; நான் வருகிறேன்.

குணவத:- குமுதா! அரசர் இப்போது இங்கு வருகிறாராம். புலவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் வரை எனக்கு அரசரைப் பார்க்க விருப்பமில்லை. நீ போ. சீக்கிரம் எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிடு. என் உத்திரவில்லாமல் யாரும் கதவைத் திறக்கக் கூடாது.

குமுதம்: அம்மணி இது விபரீதமான சங்கல்ப மல்லவா?

குணவதி:- ஆம்; வேறு வழியில்லை. கலகம் பிறவாமல்

நியாயம் பிறவாது.

குமுதம்:- அரசரின் கோபத்தி..... ற்......கு......? குணவதி:- பொறுப்பாளி நான். உ.ம். சீக்கிரம் நான் சொன்னபடி செய். அரசர் என்ன கேட்டாலும் யாரும் பேசலாகாது. .

குமுதம்:- உத்திரவு.

(கதவுகளைத் தாளிடுகிறாள்.) (குலோத்துங்கன் வருகிறான். கதவடைப்பைக் கண்டு திகைக்கிறான்.) குலோத்:- ஆகா! என்ன? இந்நேரத்தில் கதவுகளெல்லாம் தாளிடப் பெற்றிருக்கின்றன. (சுற்றிப் பார்த்து) யார்!