பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்றறிந்த போது ‘ஓ’வென்று அலறி அழுதாள். உடனே தன் ‘காதலனி‘டம் ஓடிப்போய் இச்செய்தியைத் துயரம் இழையோடத் தெரிவித்தாள். தந்தையின் சூதுமதியையும் விளக்கினாள்.

சுப்பிரமணியனிடம் பாலைமரத்தடியில் அனுபவித்த இன்பம், இனித் துன்பமாகிவிடப் போகிறது என்பதை மெய்ப்பிப்பது மாதிரி அவர்களிருவரும் சந்தித்துப் பேசி மகிழ்ந்து வந்த இன்ப ஊற்றின் உறைவிடமான சின்னப்ப முதலியின் அந்தச் சோளக் கொள்ளையிலே அன்று அறுவடை நடக்கிறது.

“இதுவரை சின்னப்ப முதலியார் கொண்டு வந்த பெண்கள் எல்லாம் படிதாண்டாப் பத்தினிகளா என்ன? அது போல நீயும் இரு. நமக்கும் அது நல்லது!” என்றான் சுப்பிரமணியம்.

தேவானை காரித்துப்பினாள் அவன் முகத்தில். ‘பளார்’ என்று ஒலியெழ ஓங்கி ஓர் அறையும் கொடுத்தாள். அவன் எழுமுன் வீட்டுக்கு ஓடினாள்.

சின்னப்ப முதலியார், திருமணத்தன்று, அவள் வாழ்வு உண்மையிலேயே அறுவடையாகி விட்டது. தேவானை மணப்பெண்ணின் கோலத்தோடு வீட்டு உத்திரம் ஒன்றிலே பிணமாகித் தொங்கினாள்!

அறுவடை ஆகி முதிர்ந்த கதிர் தலை சாய்த்துத் தொங்கியது!

101