பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடப் போறாரு. தம் சொத்தெல்லாம் உம் பேருக்கு எழுதிவைக்கப் போறாரு!”

தேவானை ஊமையாகி விட்டாள்.

ஊமையானவள் ஆசைக் காதலன் சுப்பிரமணியத்தைக் கண்டதும், வாய் திறந்து பேச முனைகிறாள். நிலை குறித்து விம்முகிறாள்.

அவன் என்ன பதில் விடுக்கிறான், புரிகிறதா? “எவனேயாவது கட்டிக்கிட்டு எங்காச்சும் போயிருந்தாயானால் நமக்கு எவ்வளவு கஷ்டம்? எங்க தாத்தெனக் கட்டிக்கிறது நல்லதாப் போச்சு!” என்கிறான்.

அவள் கொதிக்கிருள். பிறகு, சாத்மீகமான தொனி எடுத்து, காம சிநேகிதமா இருந்ததே ஊருக்குள்ளே எல்லார்த்தெ கிட்டெயும் சொல்லிடுங்களே?' என்று இறைஞ்சுகிருள்.

“அதுலே உனக்கு என்ன லாபம்?”

“உங்க தாத்தாவிடமிருந்து தப்பிச்சுக்குவேன்!”

“அவரு உன்னெக் கலியாணம் பண்ணிக்க மாட்டாருண்ணு நெனச்சுக்கிட்டாயா?”

“ஆமா!”

“தாத்தாக்கிட்டிருந்து தப்பிச்சுக்கிட்டாலும், வேறொருத்தனும் கட்டிக்க மாட்டானே?”

“எனக்குக் கல்யாணமே வேண்டாம்!”

“ஆனா எனக்குக் கல்யாணம் பண்ணாமெ எங்கம்மா உடமாட்டாளே! எனக்கு அப்புறம் யாரு பொண்ணு கொடுப்பாங்க?”

104