பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“உங்களெ நம்பினதுக்கு இந்த உபகாரமாவது செய்யக் கூடாதா?”

“இதுக்கெல்லாம் எங்க காத்தா மசியமாட்டார்! இதுக்கு முன்னாலே அவரு படிதாண்டாப் பத்தினிகளைத் தான் கூட்டிக்கிட்டு வந்து வச்சிருந்தாரா? எல்லா தேவடியாள்கள் தானே?”

‘தேவடியாள்’ என்ற சொல்லைக் கொடுத்த சுப்பிரமணியத்துக்குப் ‘பளார்’ என்று கன்னத்தில் ஓர் அறை கொடுத்து அவன் முகத்தில் காறித்துப்பிவிட்டுப் பறக்கிறாள் தேவானை!

முடிவு:

மணப்பெண் கோலத்தில் கல்யாணப் பெண் கழுத்துக்குச் சுருக்கிட்டு, விட்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறாள்!

பாவம்! கல்யாணப் பெண் தேவானை!


க. நா. சு + ஆர். ஷண்முகசுந்தரம்

எனக்கு எப்போதுமே ஒரு கொள்கை உண்டு. ஒரு பாத்திரத்தைக் கட்டுக் கோப்புடையதாகச் செய்ய ஒரே ஒரு சம்பவமாவது உயிர்த்துடிப்புடன் விளங்கவேண்டுமென்று கருதுபவன் நான்.

தஞ்சை மாவட்டச் சூழலைப் பகைப் புலமாக்கி ‘மருதாணி நகம்’ என்ற நவீனத்தை எழுதினேன். பஞ்சவர்ணம் நாயகி. படுசுட்டி அவளது கற்பைக் களவாட நினைத்தவர்களைத் தீயாகப் பொசுக்குகிறாள். உச்சக் கட்டத்தை உருவாக்கும் புண்ணியம் தீக்குக்கிட்டுகிறது.

105