பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனக்குத் துணையாகக் கிடைத்துவிட்டான் என்ற பெருமிதம் கலிங்கனுக்கு ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் அருள் மொழி நங்கை என்ற பேரழகியைச் சந்திக்கிறான்; காதல் கொள்ளுகிறான். ஆயினும் உடல் தீண்டாக் காதலர்களாகவே அவர்கள் வாழ்கின்றனர். காரணம் சோழமாதேவி மதுராந்தகி, தன்னுடைய மகள் அம்மங்கையைக் கருணாகரனுக்கு மணமுடிக்கக் கருதுகிறாள். ஆகவே கருணாகரனுக்கு உண்மையைச் சொல்லாமல் பெண்-பற்றியதில் ஆணை பெற்றுக்கொள்கிறாள்.

மதுராந்தகி தேவியும் மறைகிறாள். கலிங்கனுக்கும் கருணாகரனின் சதித்திட்டம் புரிந்து விடுகிறது. சிறைப்படுத்த முயல்கிறான். கருணாகரனும் சோழகுமாரன் விக்கிரமனின் மூலம் தப்பி வந்துவிடுகிறான். இந்நிலையில் கருணாகரனின் தங்கை இளவேணியை விக்கிரமச் சோழன் காதலிக்கிறான்.

சக்கரவர்த்தியின் ‘மண்ணு மங்கலவிழா’வின் போது கலிங்கன் திறை செலுத்தாமல் விடுகிறான். அருள்மொழி நங்கை கருணாகரனைப் பழிவாங்கத் திறைப்பொருளாக வருகிறாள். இதனையுணர்ந்த பேரரசன் அவளை மனைவியாகக் கொண்டுவிடுகிறான்.

சூழ்ச்சிகள் பலமாக நடக்கின்றன. கருணாகரனின் அண்ணன் காலிங்கராயர் சோழப் பேரரசைப் பகைத்துக்கொண்டு பாண்டியர்பால் சேர்ந்துவிடுகிறார்.

112