பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊறு செய்யாத பெருந்தகையாளர் அல்லவா? பெற்ற மகள் வைணவப் பற்றில் பற்றி நின்றாள். அவள் கெட்டிக்காரி. வாயில் விரல் பூட்டி அடையாளக் கோடு இட்டாள். செம்பியன் செல்வியாயிற்றே? நந்திகள் விலகின.

வளையோசை கேட்ட அளவில், கருணாகரன் ஏறிட்டு நிமிர்ந்தான். அவள் கட்டிலில் படுத்துக்கிடந்த காட்சி அவள் கண்களுக்கு உலகளந்த பெருமாளே நினைவூட்டிற்றுப் போலும்! கேட்கின்றாள்; கேலி மொழி, “உலகளந்த பெருமாளே! நான் சொன்னது உங்கள் துளசிச் செவியில் விழவில்லையா?”

ஆமாம், அவள் என்ன கேட்டாள்? அது காதல் ரகசியம். அதைப்பற்றி சாவதானமாக ஆராய்வோமா? இப்போது, மீண்டும் ஓர் ஊர்வல விழாவுக்கு அன்பர்களை அழைக்கிறேன்.

அதோ, அரசத் தேரில் மாதண்ட நாயகர் கருணாகரத் தொண்டைமானும்,அழகிய மணவாளனி அம்மங்கை ஆழ்வாரும் வீற்றிருக்க, தேரோட்டியாகச் சோழக் குமாரப் பேரரசன் விக்கிரம சோழன் அமர்ந்து வெண் புரவிகளைச் செலுத்திச்செல்லும் காட்சிக்கு நிகர் எது?

ஐயகோ! என்ன, அவ்வாறு விழி பிதுங்கிச் சாகின்றீர்கள்? “வெற்றிவேல், வீரவேல்” ஒலி உங்கள் மெய்யை உலுக்கி விட்டதா? அது பழங்குரல் ஐயா, பழமைத் தொனி! அந்த முடுக்கில் உங்கள் பார்வை குறுக்கோடிச் செல்கிறதே? அந்தக் கட்டாரி உங்களை ஏதும் செய்யாது.அஞ்ச வேண்டாம்! பொய்த்தாடி, மீசை, புனைவடிவத்துக்குத் தேவையில்லையா? இவை திருமுக ஓலைகள்! ஏன்

116