பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழித்து, சக்கரயுத்தன் போன்ற உத்திமுறைப் பாத்திரங்களை (actors of Suspense) ஒதுக்கி நீக்கிப் பார்க்கும் பொழுது, கீழ்க்காணும் பெயர்களை நாம் மனனம் செய்து கொள்ளவேண்டியவர்கள் ஆகின்றோம்.

விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், திரிபுவனன், அபயன் போன்ற விருதுப்பெயர்கள் விரவிய குலோத்துங்கச் சோழச் சக்கரவர்த்திகள் தாம் இக்கதைக்குப் பிள்ளையார் சுழி.

அவருக்கு வாய்த்த துணைவிமார்களின் பட்டியல் நெடுங்கணக்குப் போல.

அவர்களுள் தலைவி: உலகமுழு துடையாள்-கோப்பெருந்தேவி என்று அழைக்கப்பட்ட மதுராந்தகி தேவியார்.

இவர்கள் பெற்ற பிள்ளைகளுள் கதைக்குக் கவனம் தருகிறான் குமார சோழ விக்கிரமன், இளவரசியின்பெயர் அம்மங்கை. வாயாடிப் பெண்.

நாம் அரண்மனையை விட்டு விலகி வருகிறோம். மகாராணியின் அருள் உள்ளத்தினால் உயர் பதவி பெற்ற தளபதி கருணாகரனைச் சந்திக்கிறோம். மதுராந்தகியின் மனத்தேர் வெற்றிப் பவனி வர வீரவழி சமைத்துத் தரும் வல்லமை கொண்டவன் கருணாகரன். அவனது ரத்தத் தொடர்புக்கு உரிமை பூண்ட இளவேணி நம் கண்முன் - கலாபமாகிறாள். இளவரசி அம்மங்கையை அண்ணியாக்கக் கண்ணி வீசிய கன்னி அவள்!-ஐயகோ அவள் வாழ்வு மூன்று வினாடிக் கதை!

கலிங்கன் அனந்தவர்மன் சக்தி பெற்று, அதே தருணத்தில் சக்தியிழந்த விந்தை மனிதன். அவன் இல்லை

118