பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யேல், கலிங்கப் போர் ஏது? அவன் சாட்டை வீசி ஆட்டி வைத்த பம்பரமான அருள்மொழிக்கு மதிப்பு எது? திறை செலுத்தி நிறை காட்டவேண்டிய கலிங்க வேந்தனின் திறைப் பொருளாகி ‘இறை முடிச்சுக்கு இதோ ஒரு புதிர்!’ என்று விடுகதை சொல்லிவந்த அவள் ஏழிசை வல்லபியாக மாறியிருக்க முடியுமா? அவளை இளைய தேவியாக ஏற்கும் அளவுக்குச் சோழ பூபதியின் மனத்தை மாற்றிவிட்ட அவள் சாகஸக்காரி! சூதாட்டத்தின் சொக்கட்டான் காய் அவள்!

அப்புறம்: காலதேவர்-அவர் ‘சயங்கொண்ட கால தேவர்!’

இப்படிப்பட்ட நறுக்குத் பெயர்களை நறுக்குத் தாள்களில் கிறுக்கிச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்க்கிறேன். இரண்டு பேர்கள் என் கவனத்திற்குத் தலைவணங்குகின்றனர். அவர்கள், குலோத்துங்க சோழதேவரும், அவர் தம் மனையாட்டித் தலைவி மதுராந்தகியும் ஆவர். ‘செம்பியன் செல்வி’ கதை ஓடுகிறது-இவர்களைச் சுற்றி. சோழமாதேவியின் மனத்தேர் - அதாவது, அவரது மனக்கனவு புறப்பட்டிருக்கவில்லை யென்றால், இந்தக் கதையே புறப்பட்டிருக்காது. தேவியின் கனவுகளை நனவாக்கித் தர, இராசேந்திரர் தம் மகன் கையாலேயே அறைபடவும் தயாராகிறார். அவருடைய வீரதீர பராக்கிரமங்களுக்கும், அரசியல் சூதுவாதுச் சூழல்களின் சூழ்ச்சிக் கூத்துக்களுக்கும் ஒதுங்கி-அல்லது இணைந்து, இடம் கொடுத்து அல்லது இடம் பிடித்துக் கொள்ளும் ஓர் உயிரும் உண்டு என்பதையும் நான் மறந்து விடவில்லை.

அந்த உயிர் கருணாகரன்.

119