பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலக்கியம் என்றால் என்ன? வாழ்க்கையோடு பொருந்தியதே இலக்கியம்; வாழ்க்கையோடு பொருத்தப் பட்டதும் இலக்கியம். பொருந்தியும் பொருத்தப்பட்டும் உருவாகின்ற-உருவாக்கப்படுகின்ற - உருவாகிக்கொள்ளுகின்ற ஒரு குறிக்கோள், குணம், பண்பு ஆகியவற்றின் முதிர்ச்சியை, சிந்தனை வடிவு கொண்ட எழுத்துக்களிலே நாம் காணும் நிலையில் இலக்கியம் பிறக்கிறது. இலக்கியத்தின் ஊனும் உயிருமான சதைப் பிண்டங்கள் உயிர் கொண்டு எழுகின்றார்கள்; உலகத்தைப் புத்தம் புதிய உணர்வுடனும் அனுபவத்துடனும் தரிசிக்கிறார்கள். உலகம் அவர்களை வியப்பு விரிய நோக்குகிறது; நோக்கியதுடன் மட்டும் நின்று விடுகிறதா? அம்மனிதர்ளை எடை போடவும் செய்கிறது. உடற்பருமனுக்கு எடை சொல்ல இயந்திரம் இருக்கிறது. மனித மனங்களை எடை போட்டுச் சொல்ல இயந்திரம் ஏது? ஏன் இல்லை? உலகமே ஓர் இயந்திரம், இல்லையா? இறைமை ஆற்றலுக்கு எடை போடத் தெரியாதா?

போகட்டும்.

வெள்ளிக்கிழமையைப்பற்றி உங்கள் கருத்து யாது?

‘புனிதமான நாள்!’

‘புண்ணியம் நிறைந்த தினம்!’

‘மங்கலமான நாள்!’

‘தெய்வ ஒளி பொருந்தியது!’

மூத்தகுடி நம்முடைய தமிழ்க்குடி. தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு விரிந்தது; சாத்திரம் பார்க்கும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை இன்றியமையாத நாள்தான். அட்டியில்லை. ஏன் தெரியுமா? சிந்தாமணிக்கு இந்த வெள்ளிக்கிழமை என்றால், நிரம்பவும் ஈடுபாடு. காரணம்:

144