பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரைந்த கனவுகளுக்கும், வளர்த்த ஆசைகளுக்கும் வடிவு கண்டு, வடிவு கொடுத்து, வடிவு காட்டப்போகும் திருப் பொழுது இது.

ஆமாம்: இந்தச் சிந்தாமணி யார்?

பெண். தமிழ்ச் சாதிப் பட்டியலில் இடம் பெற்ற வாலைக்குமரி.

அவளை இனம் காண விருப்பமா?

பொறுங்கள்.

கனிச்சாறு கோத்த பழமுதிர் சோலை எனலாமா?

வண்டு மொய்த்து ‘டூயட்’ பாடும் பூங்கா என்று புகலலாமா?

குமிழ் பறித்து விளையாடும் அழகி என்று கூறட்டுமா?

சிந்தாமணியின் அழகுக்குப் பதவுரை, பொழிப்புரை எதற்கு? அவள் தமிழ்க்குமரி. போதாதா?

இன்னுமோர் உண்மையையும் கூறவேண்டும். அவள் பகுத்தறிவுக் குமரி.

ஆமாம், பகுத்தறிவு என்றால் என்னவாம்?

தோழிமார் தலைவியைத் துயில் எழுப்ப வருகிறார்கள்; தலைவியோ துயில் காணாமல் புரண்டு கொண்டிருக்கின்றாள். வெள்ளிக்கிழமையின் மகத்துவத்தைப்பற்றி பூகோளம், சரித்திரம், நாடோடிப்பாடல் ஆகியவற்றின் துணையுடன் பொது அறிவுக் கண்கொண்டு அலசித் தீர்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது, ஒருத்தி ஆண்டாள் திருப்பாவையை உரைக்கிறாள். பெரியாழ்வாரின் திருப்புதல்வி ஆண்டாள் ஆழிமழைக்கண்ணனை நோக்கிப்

145