பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நொடிப்பொழுதில் உன் துயர்களையெல்லாம் துடைத் தெறிந்து, ‘தமிழச்சி’யாக ஆகியிருக்கலாமே? பேதை நீ. உன் பேதைமை சூது ஆடிவிட்டது. உன் பெண்மையை பகடைக்காயாக்கிச் சூது ஆடி விட்டார்கள், சூதாடப் பழகியவர்கள்! நடப்பு வாழ்க்கையின் உண்மை நிலையை மெய்ம்மை நிலையை உய்த்துணராமல், நீ ஏமாந்துவிட்டாய் சிந்தாமணி, ஏமாந்துவிட்டாய்!...உன் ஆன்மா சாந்தியடைவதாகுக!...ஆன்மாவாவது, மண்ணாவது!...நீ இயற்கை எய்தியவள் ஆயிற்றே?

வெள்ளிக்கிழமையே!...நீ வீழ்க!
வெள்ளிக்கிழமை!...ஒழிக!
❖❖❖

'வெள்ளிக்ழமை' என்னும் புதினத்தில் நடமாடுகின்ற கதை உறுப்பினர்கள் யார், யார்?

அழகப்பன்: நாயகன்.
சிந்தாமணி: நாயகி.
டைகர்: தியோன்.

டாக்டர் ஆனந்தி, புலிக்கு உடந்தையாகி ஆடும் பதுமை

நயினா: அழகப்பனுக்குத் தோழன். ‘காம்ரேட்’ அல்லன்.

சிவநேசர்: சிந்தாமணியைப் பெற்றவர்— அன்று; தங்கை.

சிவசாமி: தில்லைக் கூத்தாடியின் மனையாட்டியா?

ஊஹீம், சிவநேசர் கோபித்துக் கொள்வார்!

149