பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



துணைப் பாத்திரங்கள் :

ஆண்டாள்
கிருஷ்ணபரமாத்மா
காரைக்கால் அம்மை
தசரதன்
சிவபெருமான்
சிறுத்தொண்டர்
இராவணன்
தேவேந்திரன்

அபலை சிங்தாமணி, லேடி டாக்டர் ஆனந்தி போன்றோர் உங்களுக்குப் புதியவர்கள். எனக்கோ, இவர்கள் மிக மிகப் பழையவர்கள். வாழமுடியாதவர்களாக, வழுக்கி விழுந்தவர்களாக, தூக்கு மேடையிலோ, அல்லது பராசக்தியின் திருச்சங்கிதானத்திலேயோ நான் இதற்கு முன்னம் பலமுறை கண்டது உண்டு. டைகர்!-பெயர் தான் புதிது. என்றாலும், பச்சைத் தமிழன், இரத்த வெறியன்! கதையை ஆட்டிப்படைக்கிறான், திரைப் படத்தில் வந்து மறையும் ‘வில்லன்’; ஆனால் ஆண்டவனல்லன்!

வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் இவர்களால் ஏதாவது பயன் இருக்கிறதா? ஊஹூம்...!

காரணம்: இதோ...! எழுதும் உள்ளத்தைச் சொன்னால், எழுதப்படும் கதையைச் சொல்லிவிட முடியும். இது ஒன்றும் கம்பசித்திரம் அன்று; இதை அறிய பஞ்சாங்கம் புரட்டி ஆரூடம் கணிக்கவேண்டிய நிர்ப்பந்தமோ, நியதியோ கிடையாது. இந்தப் பொய்ப் புதினத்தின் மகுடத்தைப் படித்தேன். மணிமகுடம்தான்.

150