பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யான செய்தி. புத்தகத்தை மூடிவிட்டேன். கதை உருவாயிற்று. எண்ணியது பொய்க்கவில்லை. எண்பத்தைந்து சதவிகித வெற்றி எனக்குக் கிட்டியது. ஏனென்றால், ‘வெள்ளிக்கிழமை’யை அறிமுகம் செய்து வைத்திருக்கும் பேனாவை நான் ஆண்டு பலவாக அறிந்தவன்; அறிந்து வருபவன்.

※※※

வாழ்க்கையை வாழ்க்கைக்காகவும், கலையை கலைக்காகவும், கட்சியை கட்சிக்காகவும், பிரசாரத்தை பிரசாரத்துக்காகவுமே பயன்படுத்தவேண்டும். இது என்னுடைய நினைவு.

தமிழ் இலக்கியச் சந்தையில் ‘வெள்ளிக்கிழமை’க்கு உரிய இடம் யாது? நவீனங்களின் பட்டியலில் இடம் பெறும் இந்நூல் கொண்டிருக்கக் கூடிய தனித்தன்மை, சிறப்பியல்பு, போற்றற்குகந்த பகுதிகள் யாவை? கதை உறுப்பினர்கள் என் இலக்கிய மனத்தில் ஒவ்வொருவராகத் தோன்றி மறையும்போது, அவரவர்களுக்கு நான் கொடுக்கும் மதிப்பீடு எத்தகையது?

கதையை மீண்டும் நினைவு கூர்ந்து நோக்குகிறேன். ஆழமற்ற கருவையும் அர்த்தமிழந்த நிகழ்ச்சிகளையும், ஒருதலைப்பக்கமான பிரசாரப் போக்கினையும் கொண்ட ‘நட்சத்திர மதிப்பு’ வாய்ந்த ‘பெரிய’ தமிழ்த்திரைப் படத்தைப் பார்த்து, உடனடியாக மறந்துவிட்டாம் போலிருக்கிறது.

※※※

அழகப்பன் கதைத்தலைவன். ‘அவன் எதையுமே ஆழ்ந்து சிந்திப்பவன்.’ மெய்யாகவே, அவன் சிந்திக்கத்

151