பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கின்றனர்! தணிகாசலம் தன் மனைவியுடனும் குழந்தையோடும் பிரிகிறான். அதற்கு முன் உமா சுருண்டு விழுகிறாள். —உமாவுக்குத் திருமணம் ஏற்பாடு ஆகின்றது; ஆனால் உமா எங்கோ மறைந்து விடுகிறாள்.

உமாவைத் தேடிக்கண்டுபிடிக்க ஒடுகிறான் தணிகாசலம். தன் மகளைப் பறிகொடுத்த நேரத்தில்தான் உமாவைத் தேடி எங்கெல்லாமோ அவன் ஓடினான். ஓடியவன் கண்டது உமாவையல்ல! பம்பாயிலே கணிகையாக உலவிய செங்கமலத்தைக் காண்கிறான்! ஊழிக் கூத்து மீண்டும் நடக்கிறது. அத்துடன் முடிந்து விடுகிறது செங்கமலத்தின் கூத்தும்!

தேவகி வீட்டுக்கு ஓடி வருகிறான் தணிகாசலம். சாகக் கிடந்த உமாவைக் காண்கிறான். கண்ணீர் வடிக்கிறான். உமா தன் காவிய நாயகனைக் குழந்தை தணிகாசலத்துக்குக் காட்டுகிறாள். தணிகாசலத்தின் மகள் கல்யாணியின் மீது வைத்திருந்த பாசம் உமாவை உருக்குகிறது. தணிகாசலத்தின் மீது உமா கொண்டிருந்த பாசம் உமாவை உருக்குகிறது. தணிகாசலத்தின் மீது உமா கொண்டிருந்த தூய்மை மண்டிய-தெய்வீகக் காதல் அவளைமட்டு மன்று; அவனையும் திணறச் செய்கிறது!

உமா எழுதிய காவியம் தாஜ்மகால் அவனைப் பார்த்துச் சிரிக்கிறது-உமா தணிகாசலத்தை மணக்கிறாள்! ஆம்; கெளரி தன் கணவனுக்கு உமாவை மனம் செய்து வைக்கிறாள்.

159