பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரவு வந்தது. பாவை விளக்கு சுடர் விட்டது. அணையப் போகும் உமா சுடர் விட்டாள்! அவன் மார்பில் துயின்ற உமா தூய சுடராகப் பொலிவுற்றாள்!!

கண் மயங்கிய நேரம். உமாவின் உயிரும் பாவை விளக்கும் சேர்ந்து அணைந்தன. தாஜ்மகால் சிதறியது!தணிகாசலம் கூவினான், அலறினான். “எல்லாம் ஆன ஒருவனே! எங்களால் தாங்க முடியாத துயரத்தை எங்களுக்குத் தராதே!” என்று கூவினான். இப்படிக் கூவத்தான் அவனால் முடிந்தது!...


என்னுள் அகிலன்

பாவை விளக்கை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். எனக்குத் தணிகாசலத்தின் உருவம் மட்டும் தட்டுப்பட மறுக்கிறது. ஆனால், அவனுடைய இதயக் குரலை மாத்திரம் என்னால் வாங்கிக் கொள்ள முடிந்தது.

‘எங்கும் நிறைந்த ஆண்டவனே! எல்லாம் ஆன. ஒருவனே! எங்களால் எந்தச் சுமையைத் தாங்க முடியாதோ, அந்தச் சுமையை எங்களுக்குத் தராதே! நாங்கள் வலுவிழந்த மனிதர்கள்!’ தணிகாசலத்தை நான் திரும்பவும் ஏறிட்டு நோக்குகிறேன்.தணிகாசலத்தில் உமாவையே காண்கிறேன். அகலையும் சுடரையும் சேர்த்துத் தாங்கி நிற்கின்றாள் உமா ‘உருவமில்லாப் பூங்குயில்’ அல்லவா அவள்...?

160