பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள் எனக்கு ஏற்பட்ட ஒரு ‘விபத்’தும் கூடவே நினைவைச் சொடுக்கியது. புகைப்படம் எடுக்கச் சென்றேன். என்னை எழுத்தாளராகக் கண்டு பழகியவர் படம் பிடிப்பவர். ஆகவே, என் கையில் பேனா ஒன்றைக் கொடுத்தார். மேஜைக்கு முன்னே தலையணப் புத்தகங்களையும் விசிறிப் போட்டார். என் ‘விசிறி’ அவர், மனத்தில் காற்றோட்டம் இருந்தது. எடுக்கப்பட்ட படத்தில் ‘என்னை’விட, என் கையில் இருந்த பேனாவும் எதிரிலிருந்த ஊர் பேர் தெரியாத புத்தகங்களுமே துலாம்பரமாக விளங்கின. போதுமே! ஓர் எழுத்தாளனுக்கு இவைதாமே ‘வியாபாரக் குறியீடு’கள்?

இன்று நான் தணிகாசலத்தைச் சந்திக்கிறேன்; முதற் சந்திப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், திரு அகிலன் சந்தித்ததற்குப் பின்னர் எனக்கு அறிமுகமான பெயர் தான் தணிகாசலம் தொடக்கத்திலும் ஒரு பேனா; அது அவனுடைய சொந்தப் பேனா. முடிவிலும் ஒரு பேனா. இது உமா கொடுத்த அன்புப் பரிசு விலை மதிப்பில்லாதது!

ஓர் ஐயம்: நாவலாசிரியர் காணத் துடித்த, காண முயன்ற கண்ட அந்தத் தணிகாசலத்தைத் தான் நான் கண்டிருக்கிறேனா?

மனிதமனம் ஒரு ரசாயனக் கூடம். ஏனென்றால், உள்ளும் புறமும் மனத்தின் இரு துருவமாக இலங்குவது உண்டு; இரு மனம் கலந்த ஒரு மனமாகக் காட்சியளிப்பதும் இயல்பு. இந்த ஒரு மனத்தை பெளதிக மாற்றம் என்று குறிப்பிடலாம். விஞ்ஞானத்தில் இந்தத் தலைவலி, வரிகளை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். இரண்டு ரசாயனப் பொருள்கள் சேரும்போது புதிய பொருள் ஒன்று

164