பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யின் சரிபாதியை ‘அறியாப் பிள்ளை’ தணிகாசலத்திடம் சேர்ப்பது நலம் பயக்கும். எஞ்சும் பகுதியில் உறவு கொள்ள உரிமை பூண்டவள் தேவகி. கொண்டவன் அவளது திலகத்தைப் பறித்துக்கொண்டான். பறி போன திலகம் விதியைக் கண்டு சிரிக்கிறது; விதியோ தணிகாசலத்தைப் பார்த்துக் கள்ள நகை புரிகிறது; தணிகாசலமோ விதியை நம்பாமல், தேவகியை நம்பி, அவளுடன் மனம் விட்டுப் பேசவேண்டிய கட்டத்திற்கு உருவாக்கப் படுகிறான்; ஆனால் உண்மையாக மனம்விட்டுப் பேசியவள் தேவகி!

நடுச் சாமத்தில் தேவகி வருகிறாள்; தணிகாசலத்திடம் வருகிறாள். ‘உலகத்தின் சோகம் முழுவதும் அந்தக் கண்களில் நன்றாய்த் திரண்டு முத்து முத்தாகப் புறப்படுகிறது.' திடீரென்று கீழே சரிந்து விழுந்து தணிகாசலத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு தேம்புகிறாள். அவனது கால்களைத் தொட்டுக் கை தொழ அவளுக்குச் சொந்தம் வேண்டுமாம்...!

“நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள நினைப்பது நியாயந்தானா?” என்கிறாள் தேவகி.

“நியாயந்தான்!...” என்று சொல்கிறான் தணிகாலம். அதைத் தொடர்ந்து ஒரு ‘ஆனால்’ என்னும் முட்டுக் கட்டை புறப்படுகிறது. அதைக் குறுக்குக் கோடாக வைத்து எல்லை சொல்வதற்கு அவள் போதுமான காலவேளை கொடுத்தாள். எதற்கும் ‘வேளை’ வரவேண்டும், பாருங்கள். தணிகாசலத்துக்கோ, எட்டி நின்று பார்க்கும் வேளையில் மட்டுமேதான் தேவகி. அவன் மனத்தோடு ஒட்டுகிறாள்: ‘காத’லும் உறவு கொள்கிறது. பக்கத்தில் நின்று பார்க்கும்போது, அவளுடைய ‘அழகு’ அவனுக்குப்

166