பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நினைக்காதீர்கள். என் லட்சிய சித்தியான இந்தக் காதல் கவிதைகளின் தலைவர் நீங்கள் தாமே?...’ அவனுடைய விழி வெள்ளத்தின் கரை உடைபடுகிறது. ஏன்? உமாவின் தோல்விக்கு அவன்தான் மெய்யாகவே காரண கர்த்தாவா?

‘எனதுயிர் மன்னவனே!’ என்று உமா தன் கவிதைகளில் கூவி யழைத்தது அவனைத்தானா? ‘என்னிடம் நேரில் சொன்னையே, அது போல் நீ வேறு யாரையும் மனத்தால் கூட நினைக்காமல் இருந்தால் போதும்’ என்று செங்கமலத்துக்கு அனுப்பிய கடிதம் அவன் நினைவில் தோன்றிவிட்டதா, என்ன?

பெருமூச்சுத் தப்பிப் பிழைக்கிறது. என்னுடைய கைப் பேனா மைவழி ஓடுகிறது:

“தணிகாசலம் முழுமையடையாத ஓர் அரைகுறைப் பாத்திரம்!”


அடுக்கு மல்லிகை

உமா தன்னுள் எண்ணிப் பார்க்கின்றாள்:

‘அவர் என்னத் தவறன கண்கொண்டு நோக்கவில்லை. அவர் என்னை இழிந்த குணமுள்ளவளாக மதிக்கவில்லை. கண்ணியக் குறைவாக அவர் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. அப்படி ஏதும் நான் அவரிடம் குறை கண்டிருந்தால், என்றைக்கோ அவரை விட்டு விலகியிருப்பேன். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இவர் உயர்ந்து கொண்டே போகிறாரே? இவரிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது?’

169

அ—11