பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனத்தை ஒரு சோதனைச் சாலைக்கு உவமை காட்டிச் சொல்வது எனக்கு நிரம்பப்பிடிக்கும். ஆனால் இங்கே உலகத்தையே சோதனைக் கூடமாக்கி, மனத்தைச் சோதனைப் பொருளாக்கி விட்டாள் உமா. வாழ்க்கையை கேலியாக - வம்பாக - பரிகாசமாக - வீம்பாக ஆக்கிக் கொண்ட அவள் ‘அவர், அவர்’ என்கிறாளே, அந்த அவர் யாரென்றுதான் உங்களுக்குப் புரிந்திருக்குமே?

அவர்: ஸ்ரீமான் தணிகாசலம்.

அகம், புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் சூழ்நிலையால் பாதிக்கப்படும் தன்மை வாய்ந்தவன் தணிகாசலம். ஆகவே, அவன் காணும் கனவுகளில், எண்ணும் கற்பனைகளில், சிந்திக்கின்ற எண்ணங்களில், எதிர்பார்க்கின்ற லட்சியங்களில், உருவாக்கிக் கொள்கிற ஆசாபாசங்களில், அழித்துக் கொள்கின்ற நப்பாசைகளில் அவன் அவனாகவே காட்சியளிக்கிறான். அவன் மனிதன். கடவுளைப் படைக்கும் வல்லமை பெற்ற மனிதன். ஆனால் கடவுளால் படைக்கப்படும் துர்ப்பாக்கியம் பெற்றவன். ‘இவரிடம் என்ன தனித்தன்மை இருக்கிறது?’ என்று பூப்போன்ற புனிதம் கொண்ட, பூப்போன்ற மென்மை வாய்ந்த ‘அடுக்கு மல்லிகை’யான உமாவின் பெண் இதயத்தை ஆராய்ச்சி செய்ய வைக்கத் தெரிந்தவன். ஆனால் அவன் அவளைப் புரிந்துகொண்டானா? இல்லை! தன்னைப் பற்றித் தான் அவன் தெரிந்துகொண்டானா? அதுவும் இல்லை! ஒரு வேளை, இந்த ஒரு விந்தைப்பண்புதான் அவனுடைய தனித் தன்மையோ? பட்டும் படாத இத்தகையதொரு ‘கோழைத்தனம்’ அவனது வெற்றியா? அந்த வெற்றி தான் உமாவின் தோல்வியாக அமைந்ததா? இந்த வெற்றிதோல்விகளுக்கு யார் பொறுப்பாளி உமாவா? தணிகா-

170