பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிடியில் பற்றியிருந்த அவனிடம் தேவகியை ஒப்படைக்க வேண்டுமென்கிறார்கள் பலர். இப்போது வரும் கதைகளில் இது ஒரு நாகரிகம். அகிலன் அன்புப்புரட்சி செய்பவர். தேவகியைக் காப்பாற்றிவிட்டார். அவர் தணிகாசலத்தின் பிற்கால வாழ்வை தீர்க்கதரிசனக் கண் கொண்டு வரையறுத்திருக்க வேண்டும். ‘கடன்’பட்ட தேவகி தன் கடனை தணிகாசலம் உணர வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தாள். தேவகியை நாவலாசிரியர் வஞ்சித்து விட்டார்!


ஆத்மாவுக்காக...!

தாமஸ் ஹார்டியின் ‘The woodlanders’ என்னும் நவீனத்தில் வரும் மேரியில் உமாவை என்ணால் தரிசிக்க முடிகிறது. தோன்றி மறையும் மின்னல் அவள். ஆத்மாவுக்காகவே ஆத்மா கொள்கிற ஆத்மீகக்காதலை (platonic love) படிப்படியாக வருணித்து, மன ஆழத்தின் விந்தை உணர்ச்சிகளையும் மனிதத் தன்மையின் இயந்திர கதியின் விளக்கத்தையும் ஒரு நிலைப்படுத்தி, நவீனத்தின் பிறப்புக்குக் (purpose of the novel) உமாவையே ஓர் உதாரணமாக்கி, அவளைப் பள்ளியறைப் பதுமையாக்குவதற்குச் ‘சட்டம்’இன்றி, சரியான நேரத்தில் (correct juncture) நாசூக்காகச் சாகடித்து அவளை அற்புதப் படைப்பாக்கி விட்டிருக்கிறார் திரு அகிலன்.

அந்தப்புர அந்தரங்கங்கள் பண்டை வரலாறுகளுக்கு மட்டுமே உரியவை என்று நினைத்திருந்தேன்.மேற்குறிப்பிட்ட உள் வாழ்வின் வெளிவிளையாட்டுக்கள் தணிகாசலத்திடமும் இருக்கக் கண்டபோது, வருத்தம்

180