பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யுணர்வு’ கிளர்ந்தெழ, அவளுடைய கரத்தைப் பற்றித் ‘தொட்டு’ இழுக்கப் போனபோதும் என் மனம் எழுப்பிய ஒரே கேள்வி இது: ‘தணிகாசலம் ஏன் எழுத்தாளன் ஆனான்?’


க. கா. சு - கல்கண்டு

ஓவியனுக்கும், நாவலாசிரியனுக்கும் ஓர் உடன்பாடு உண்டு. திரு அகிலன் அவர்களிடம் ஓவியனுக்கு இருக்க வேண்டிய ஆழ்ந்த புறநோக்கும், நாவலாசிரியனிடம் நாம் எதிர்பார்க்கும் பண்பட்ட இலக்கிய மனமும் இருக்கின்றன. அதனால்தான் ‘பாவை விளக்கு’ நல்லதொரு குணச்சித்திரமாக (nove of character) உருவாயிருக்கிறது.

எதிர்பாராத நிகழ்ச்சிகளை வாழ்க்கைப் பாதையின் எதிர்பார்த்த விபத்துகள் என்று சொல்ல வேண்டும். தேவகியும் கெளரியும் ‘எதிர்பார்த்த விபத்து’கள் என்பது என் கருத்து. செங்கமலமும் உமாவும் எதிர்பாராத சம்பவங்கள். காதலை முக்கோண வடிவில் வரைந்து பழக்கப்பட்டவர்களுக்கு தேவகி, உமா, செங்கமலம், கெளரி ஆகிய நான்கு புள்ளிகளை வைத்து நாற்கோட்டுருவம் சமைத்து அதனுள் தணிகாசலத்தைத் தள்ளி, உணர்ச்சியையும் அறிவையும் ஈந்து, போதாக் குறைக்கு அவனை எழுத்தாளனாகவும் ஆக்கி, ஆசைகளின் விபரிதச் சுழற்சி (fantacy of desires) திண்டாடித் திணற வடித்திருக்கும் முறை ஓர் ஆறுதலாக இருக்கலாம்!

‘சிநேகிதி,’ ‘வாழ்வு எங்கே?’ ஆகியவை திரு அகிலனின் நவினங்கள். ‘சிநேகிதி’ என்ற மூலப் பாலிலிருந்து

182