பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீர்க்கலவை செய்யப்பட்ட தண்ணீர் தான் ‘பாவை விளக்கு’ என்பது திரு க. கா. சு.வின் வாதம் ‘வாழ்வு எங்கே?’யும் ‘பாவை விளக்’கும் ஒன்றென ‘பிராய்ட் தேற்றம்’ போன்று ஒருமுறை பதிலிறுத்திருக்கிறார் ‘கல் கண்டு’ ஆசிரியர். இவ்விருவரும் அகிலனைக் குழப்பவில்லை; தங்களைத் தாங்களே தைரியமாகக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், அவர்கள் எழுத்தாளன் என்ற தணிகாசலத்தை அடித்தளமாக்கிக்கொண்டு குழம்பியிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ‘சிநேகிதி’யில் ஓர் எழுத்தாளனும் ‘வாழ்வு எங்கே?’யில் ஓர் எழுத்து ஆசிரியனும் வருகிறார்கள்...!


அ. ச. ஞா. மறுக்கிறார்!

தணிகாசலத்தைக் கை குலுக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நம்பத்தகாத விதத்தில் அமைந்து இருப்பினும், நம்பத்தக்க சம்பவங்களாகவே (make-believe incident) ஆசிரியர் தமது நுணுகிய கட்புலனாலும் தேர்ந்த சொல் வளத்தாலும் எடுத்துக்காட்டுகிறார். அத்தகைய நிகழ்ச்சிகளில் போர்த்தியிருக்கின்ற ‘இயற்கையற்ற நிலை’யை நம் கண்களினின்றும் மறைத்துவிட்டுத் தப்பித்துக்கொண்டு கல்மூச்செறியும் சாகஸத்தையும். கற்றுக்கொண்டிருக்கிறார். மேற்படி சம்பவங்களின் செயல்பற்றிய வாதப் பிரதிவாதத்தில் (logic of action) அவர் வெல்லவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. பதச்சோறு: ஓடும் ரெயில் வண்டியில் உமாவின் பூங்கரம் பற்றி இழுத்துக் காப்பாற்றிய தணிகாசலத்தின் கெட்டிக்காரத்தனம். ஸ்பரிச உணர்வு தான் மன வுணர்ச்சிகளின் கூத்துக்கு முதற்காரணம் என்பது உளநூல் வல்லாரின் கருத்து:

சமூகத்தின் சித்திரம் (picture of society) சுவைபூண்டது. ஆனால் சமூகத்தொண்டனாக, புரட்சியாளனாகத் தணிகாசலம் அடிக்கடி மாறி அறிவு, கலை, காட்டுத்-

183