பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொண்டு என்று என்னவெல்லாமோ பேசுகிறான்! ஆழ்ந்த கருத்துக்களை மெல்லிய நகைச்சுவை உரையாடல்களின் வாயிலாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசுகிறார் திரு அகிலன். அற்புதம்! தேவை தான். திரு ரகுநாதனுக்கும் திரு க. கா. சு. வுக்கும்கூட இஷ்டம்தான்! ஆனால், திரு அ. சா. ஞா. -மறுக்கிறார்கள்.


நெஞ்சின் அலைகள்

தணிகாசலத்தை-சராசரி மனிதனின் (average man) குறைநிறைகளின் பொலிவுடன் விளங்கும் தணிகாசலத்தைக் கண் விலக்கி, கண்ணீர் விலக்கி, இதயம் விலக்கி, இனிய நினைவு விலக்கிப் பார்க்கிறேன்; நுணுகி நுணுகிப் பார்க்கிறேன். தணிகாசலம் என்ற ‘உணர்ச்சிப் பிண்ட’த்திலிருந்து, அவனது உள்ளொளியைச் சுட்டிய தேவகி எழும்புகிறாள்; அந்த உள்ளொளியைத் தூண்டிய செங்கமலம் பிரிகிறாள்; அதற்கு அகலாக அமைந்த கெளரி நிற்கிறாள்; அகலையும் சுடரையும் சேர்த்து ஏந்திய உமா நிலைக்கிறாள். தணிகாசலத்தின் பலமிழந்த ஆசாபாசங்ளைக் கொண்டு பிறந்து, வளர்ந்து, வாழக் கனவுகண்டு, கண்ட கனவு கனவாகிப் போராடியவர்கள் இவர்கள்! இறுதியில், இயற்கையும் இருதயமுமே வெற்றி பெற்றன! கெளரியை வாழ்வின் துணைகலமாகக் கொண்ட தணிகாசலம் பேறுபெற்றவன்!

‘நெஞ்சின் அலைகளில்’ அறிமுகமாகிய புஷ்பாவில் உமாவும், கனகத்தில் கெளரியும் நிழலாடுகிருர்கள்.

நானூறு பக்கங்களிலே உருவாகி அழிந்த உமாவைக் காட்டிலும், நாலு பக்கங்களில் தோன்றி நிலைத்த தேவகி முழுமை பெற்ற தமிழ்ப்பெண்! ஆம்; இந்தக் கம்பசித்திரம் தீர்ந்த சிந்தனை கயமும், ஆழந்த கற்பனை வளமும், துண்ணிய அன்பு மனமும் கொண்ட குணச்சித்திரப் புதின வேந்தன் திரு அகிலன் அவர்களுக்கே ஆகிவந்த மாபெரும் வெற்றியாகும்.

184