பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யுள்ள இன்றைய அணு யுகப் புது நாகரிகம் இருக்கிறது பாருங்கள், அதன் சரித்திரம் அந்தம் உடையது; அர்த்தமில்லாதது.

மோகக் கிறக்கத்தில் நாகரிகப் பித்தும் ஒன்று. இவ்வகையில் பார்க்கும்பொழுது, ராகவனுக்கு வெள்ளைக்கார நாகரிகம் என்றால் ஒரு பைத்தியம் (mania);

கிழக்கும் மேற்கும் சக்திப்பதென்பது வியப்புத் தான்!

‘இமிழ்கடல் வேலித் தமிழக’த்தில் பிறப்புக் கொண்டவன் ராகவன்.

அவன் ஒர் அதிசயப் பேர்வழி.

சென்னைப்பட்டினத்தில் பத்மாபுரம் என்றொரு பகுதி. ஊரையும் பேரையும் ஆராய்வதை விட, இப்போது, நம் தலைமைக் கதாநாயகனின் குணாதியங்களை ஆராய்வது நலம் பயக்கும்.

‘தேவிஸதனம்’ என்ற மனையில், பத்மலோசன சாஸ்திரிகளுக்கும் காமாட்சியம்மாளுக்கும் பிறந்தவன். இரண்டாவது புதல்வன். ‘ஸநாதன ஹிந்து தர்மத்தின் சுவட்டை மிதிக்க வேண்டிய பிள்ளையாண்டான், வடக்கத்திப் பெண்ணாகிய தாரிணி என்பாளைக் காதலித்தது ஒரு தனிக்கதை. நாகரிகப் பண்பாட்டில் திசை குறுக்கிடுவதில் தவறோ, தரக்குறைவோ, தகுதி மாற்றமோ இல்லையென்றால், நமக்குத் திக்குகளைப் பற்றித்தான் என்ன கவலை?

தாரிணி அழகி. விட்டகுறை-தொட்டகுறையென்னும் ‘சிருஷ்டிச்சிக்கலின் வேதாந்த ஈடுபாடு’ அவளுக்கு

23