பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊர் ஊராகச் சுற்றி, திருடி, மயக்கி சாகசம் செய்த இந்த ராணி...ராணியா இவள்? இவளுக்கும் வேஷம் தான்!...” என்ற நினைவை ஊட்டுகிறான் நடிக ராசா. அவன் குமரன்.

குமரனுக்கு முறைப்பெண் ரஞ்சிதம்.

ரஞ்சிதத்தை ஆசிரியை அறிமுகம் செய்யும் அழகு, ரஞ்சிதத்தின் அழகுக்கு அழகாக அமைகிறது.

சரி, ரஞ்சிதத்தைப் பாருங்கள்.

பார்வையில் பண்பு இருக்கட்டும், உஷார்!—அதோ பொன்னன்!

இதோ, ரஞ்சிதம்

மஞ்சள் பூச்சு மிளிர்ந்த மாநிற முகத்தில் களி துள்ளும் கருவிழிகள்; ஒளியிடும் வெண்பற்கள்; காதிலே வெள்ளைக் கம்மலும் கழுத்திலே சரட்டட்டிகையும் அவள் முகத்துக்குப் பெருமையுடன் எழில் காட்டின. கைகளில் குலுங்கக் குலுங்கக் கண்ணாடி வளையல்கள், கால்களிலே கொலுசு அவள் கன்னி வடிவம்! அவள் தயிர்க்காரி; ஆனாலும் அவள் தயிர் இனிக்கத்தான் செய்யும்!

இந்த ரஞ்சிதத்துக்காக நடந்த போட்டாபோட்டிகள் எத்தனை? முளைத்தெழுந்த காமக்குரோதங்கள், கரவும் கள்ளமும் எத்தனை?

குமரன் நல்லவன்; குழந்தை மனம். வாழ்வாங்கு வாழ விழைந்தான். தீமை தோயாத வாழ்வு வாழவேண்டும் எனவும் பிறரும் நல்வாழ்வு வாழ வழி காட்டவேண்டும் எனவும் இலட்சியம் வைத்திருந்தான். ஆகவே தான், பொன்னைவிட குமரன்பால் அதிக ‘வேட்கை’ கொண்டு

81