பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராமன் செய்த ‘படுத்தடிக் காரியம்’ என்ன முடிவு கண்டது? பட்டணத்து வங்கி ஒன்றிலே களவு போன இருபதினாயிர ரூபாயின் ‘தலைவிதி’ என்ன? மேற்படி பணத்தைக் கையாடினவர் குருஸ்வாமி என்ற ‘உண்மை’ நம்மை எட்டிப் பிடிக்கத் தவறவில்லை. ஆனால், சீதாராமனின் நேர்மையும் நாணயமும் கண்ட தீர்ப்பு என்ன ஆயிற்று? பிராயச் சித்தமே இல்லாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டவன் போல அவன் தலை இறங்கியதற்குக் காரணம் என்ன? ‘ஒரு கத்தை நோட்டுக்கள்’ அவனுக்குக் கிடைத்தனவே, எப்படி? மறுமொழிகளை நாம்தாம் ஊகம் செய்து கொள்ளவேண்டுமாம்! ...

நளினியின் ‘குழந்தையுள்ளத்’தில் சீதாராமனைப் பற்றிய வரையில் இரண்டே இரண்டு காட்சிகள்தாம் நின்றன. ஒன்று, சீதாராமன் விஜயபுரம் வந்தபோது, அவனைப் போலீஸார் கைது செய்து அழைத்துப் போனது; இரண்டாவது, குருஸ்வாமியும் அவனும் தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விவாதம் செய்தது.

சரி. இப்படிப்பட்ட இரண்டு காட்சிகளும் அவளுடைய மனத்தைச் சலனப்படுத்தியிருந்தால், அவனைப் பற்றி அவள் ஒரு புதுப் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கமாட்டாளா? காலங்கடந்து அவள் படித்துக் கொண்டதால்தானே, அவளது ‘இறுதிக் கடிதம்’ உருவானது? ‘குழந்தை உள்ளம்’ என்று ‘சப்பைக்கட்டு’க்கட்டி நளினியை நாட்டாற்றில் அகப்படச் செய்திருக்கும் இவர் ‘சீதாராமனைப் பற்றிய வரையில், நளினிக்கு ஒரு மனோ திடமும், சிந்திப்பதற்கான ஒரு முதிர்ச்சியும் ஏற்பட்டிருந்தது வாஸ்தவமே!’ என்று வேறு ‘வக்காலத்து’வாங்கிக் கொண்டு தத்தளிக்கிறார், பாவம்! தன் வாழ்க்கைப் பிரச்-

92