பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



8

படுகிற ஆணும் பெண்ணும் சந்திக்கும் முதல் இரவும் அடுத்த சில தினங்களும் வாழ்வின் எத்தகைய முக்கிய சந்தர்ப்பங்கள் என்பது நன்கு புரியும்.

முதல் சந்தர்ப்பங்கள் தரும் எண்ணங்களின் தன்மையை உணரக் காலமும் அனுபவமும் துணை புரியலாம். ஆயினும் அதற்குள் நாச விளைவுகள் எவ்வளவோ ஏற்பட்டு விடும்.

இவ்வித விளைவுகள் பிறக்காமலிருப்பதற்காகத் தான், கல்யாணத்துக்குப் பிறகு தான் காதலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

கல்யாணச் சடங்குகளும், கூட்டத்திடையிலும் ஒழிவு மறைவாகச் சந்திக்க முயல்வது, சந்திப்பது, பின் பிரிவது, மறுவீடு செல்வது முதலிய சம்பிரதாயங்கள் எல்லாம் புதிதாகக் கல்யாணமான ஆண் பெண்களுக்கு அன்பும் நட்பும் ஆசையும் அதிகம் வளரத் துணைபுரியும்.

கல்யாணமான புதிதில் எழும் ஆசையும் அன்பும் நீடித்து நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவை நீடித்து வளரும்படி செய்ய வேண்டியது கல்யாணமானவர்களின் பொறுப்பு.

ஒவ்வொரு கணவனும் தனது மனைவி அழகாக அழகுக்கு அழகு செய்து கொண்டு வசீகரமாகத் திகழ வேண்டும் - புன்னகையுடனும் குன்றாத பொலிவுடனும் மின்ன வேண்டும் - என விரும்புகிறான். அவன் புதுப்பெண் போல - என்றும் புதுமை குன்றாதவளாக - கண்ணுக்கு நிறைந்த அழகாக உலவ வேண்டும் என அவாவுகிறான்.

கணவன் தன்னிடம் ஆரம்பத்தில் கொண்டிருந்த ஆசையுடனும் அன்போடும் என்றும் பழக வேணும் என மனைவி விரும்புவதும் இயற்கையே. ஆனால் வீட்டில் நடப்பது என்ன?

ஸ்ரீமதி அழகு செய்து கொள்வதில்லை. தலை முடித்துப் பூ வைத்துக் கொள்வதில் கூட முன்பிருந்த