பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

":Noam-munu,uyutb LUaUmoglyti – J. «fìofleum&oår 13 இராஜாஜி அவர்கள் சக்கரவர்த்தித் திருமகன் இராமாயணம்) வியாசர் விருந்து (மகாபாரதம்) ஆகிய தமிழ் உரைநடை நூல்களை (முதலில் கட்டுரைகளாக) எழுதினார். அந்த நூல்கள் வெளியிடப்பட்டு பல்லாயிரக் கணக்கான பிரதிகள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் வேகமாக விற்பனையாகிப் பரவியது. மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தனது இராமாயண உரைநடை நூலில் ராமாயணம், பாரதம் முதலிய புராணங்களைப் படிக்கும் இக்காலத்தவர்களுக்குப் பொதுவாகச் சில வார்த்தைகள் என்று தொடங்கி புராணங்களில் தேவர்களும் ராகூசர்களும் அடிக்கடி வருவார்கள். ராக்ஷசர்கள் என்பவர்கள் அதருமத்துக்குக் கொஞ்சமும் பயப்படாத துஷ்டர்கள் குலம். சர்வ சாதாரணமாகத் தீய காரியங்களைச் செய்வார்கள். "இரக்க மென்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்று உளர் பலர் அறத்தின் நீங்கினார்”. என்று கம்பர் விளக்கியிருக்கும் கூட்டம் அசுரர்களையும் ராகூசர்களையும் போன்றவர்களே! ராக்ஷசர்களிலும் கூட ஒரு சில அறிவாளிகளும் நல்லவர்களும் இருந்தார்கள். எந்த நல்ல குலத்திலும் சில தீயவர்கள் உண்டாவார்கள். அப்படியே எந்தக் கெட்ட குலத்திலும் சில சமயம் நல்லவர்களும் இருப்பதுண்டு. ஆனால் மொத்தத்தில் ராக்ஷசர்களும் அசுரர்களும் கம்பர் சொல்லியிருக்கிறபடி தீய கருமங்களிலேயே ஈடு பட்டுச் சந்தோஷப்பட்ட கூட்டம். அவர்களைத் தமிழர்கள் என்றும், நம் முன்னோர்கள் என்றும் சிலர் இக்காலத்தில் அறிவீனமாக எண்ணியும் பேசியும் வருவது பரிதாபம். எந்தப் பழைய தமிழ் நூலிலாவது சரித்திரத்திலாவது தனிப் பாட்டிலாவது கிராமப்பாட்டிலாவது இப்படிச் சொன்னதில்லை. தமிழர்களுக்கு நீங்கள்தான் புராணத்தில் அரக்கர் என்று சொல்லப்