பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Egjipponu 14 பட்டவர்கள் என்கிற புதுப்பட்டம் அளிப்பதற்குப் பழைய தமிழ் நூல்களில் ஆதாரம் எங்கும் இல்லை என்றும் மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். எனவே தவறான உண்மைக்குப் புறம்பான அறிவுக்குப் பொருந்தாத நச்சுக் கருத்துக்கள் சமுதாய நீரோட்டத்தில் புது வெள்ளத்தின் துறைகளைப் போல் ஒதுங்கி மறைந்து வருகின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் கம்பனும் வள்ளுவனும் இளங்கோவடிகளும், ஒளவையும், ஆண்டாளும், மங்கையர்க்கரசியும், திரகவதியம்மையாரும் பிறந்து வளர்ந்து நல்லறம் நடத்திய இந்தப் புண்ணிய பூமியில் திருமூலரும் தாயுமானவரும் வள்ளலாரும் மகாகவி பாரதியாரும் பிறந்து நடமாடிய இந்த தமிழ் திருநாட்டில் இராஜாஜி போன்ற அறிஞர்களும் பேரறிஞர்களும் அரசியல் நெறிகள் வளர்த்த இந்த தங்கத் தமிழகத்தில் அத்தகைய இனவாதப் புன்மை இருட்கணம் நீங்கி தேச பக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்த புதிய சிந்தனைகள் தோன்றி ஒளி வீசக் தொடங்கியிருப்பதைக் காண்கிறோம். மகாகவி பாரதி கூறினான் தமிழா தெய்வத்தை நம்பு பயப்படாதே உனக்கு நல்ல காலம் வருகிறது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். தெய்வம் கண்ட கவிகள், அற்புதமான சங்கீத வித்வான்கள், கை தேர்ந்த சிற்பிகள், பல நூல்வல்லோர், பல தொழில்வல்லோர், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியில் தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்து விட்டு நான்கு பக்கங்களிலும் பார்! நமது நாட்டு ஸ்திரிகளிலே பலர் சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வலிமை, வீரியம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்கள் எல்லாம் உன்னைச் சார்ந்திருக்கின்றன. “தமிழா பயப்படாதே" என்று கூறுகிறார்.