பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்றுவாய் 20 பார் என்று கூறி வீடணனை நோக்கித் தனது சரங்களைத் தொடுக்க முனைந்தான். அப்போது வீடணன் இந்திரசித்தனுடைய நிந்தனைகளுக்குப் பதில் கூறிப் பேசுகிறான். பாவம் கொடுமையானது. தருமமே மிகவும் சிறந்தது. அறத்திற்கே துணையாக நிற்பேன். மறத்திற்குத் துணையாக நின்று மாயாப் பழியோடு வாழ மாட்டேன். மெய்மை துறக்க மாட்டேன். பொய்யின் பக்கம் நிற்க மாட்டேன். இலங்கை வேந்தன் தவறுகளை இழைத்த போதே நான் அவனுக்குப் பின் பிறந்திலேன் நான் நறவம் (கள் - போதைப் பொருள்) உண்ண மாட்டேன். வஞ்சகம் புரிய மாட்டேன். என் பால் யாரும் எந்தக் குற்றமும் குறையும் காண முடியாது. உமக்கும் அது தெரியும், பெண்களை அபகரித்து வாழும் மன்னனைத் துறந்தது பிழையாகாது. மூன்று உலகங்களும் போற்றும் முதல்வன், தேவர்களுக்கெல்லாம் தேவன், அவன் தேவி, கற்பினில் சிறந்தவள், அவளை வன்முறையால் கவர்ந்தது தீது. அவளை நோகடிப்பது நல்லதல்ல. அந்த மாற்றான் தேவியை விட்டு விடுங்கள் என்று நான் கூறிய போது உன் தந்தை என் மீது கடுங்கோபம் கொண்டு வெகுண்டு போ வெளியே' என்று என்னை விரட்டி விட்டான். அப்போது நான் உங்களை விட்டு வெளியேறினேன். அதனால் எனக்கு வேண்டுமானால் நரகம் கிட்டட்டும். அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும் உண்மை அறிந்து இராமனை அடைவது அறிவுக்குப் பொருத்தமானது என்று இங்கு வந்து சேர்ந்தேன். வருவது வரட்டும் என்று வீடணன் இந்திரசித்தனுக்கு பதிலளித்தான். இந்திரசித்தனுடைய நிந்தனைகளுக்கு வீடணன் கூறிய மேற்குறிப்பிட்ட பதில் குறித்த கம்பனுடைய தனிச் சிறப்பான கவிதை வரிகள். "அறம் துணையாவது அல்லால் அருநரகு அமைய நல்கும்