பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 SSTfögyearu- 22 உம்மையே புகழும் பூண்க! துறக்கமும் உமக்கே ஆக! செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத்தேறும் எம்மையே பணியும் பூண்க! நரகமும் எமக்கே ஆக.” "அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞானத் திறத்தினும் உறும் என்று எண்ணித் தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன் புறத்தினில் புகழே ஆக! பழியொடும் புணர்க! போகச் சிறப்பிணிப் பெறுக! தீர்க! என்றனர் சீற்றம் இல்லான்” இவ்வாறு வீடணன் தன்னிலைவிளக்கம் கூறுகிறான். இந்திர சித்தன் சிறுபிள்ளை. அவனுடைய பேச்சும் சிறுபிள்ளைத்தனமானது. ஆயினும் உலகம் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக வீடணன் இந்த விளக்கத்தைக் கூறுகிறான். இதில் இனவாதத்திற்கு இடம் எங்கே இருக்கிறது. இருப்பினும் சிலர் அறியாத்தனமாகக் கூறும் சிறுபிள்ளை வாதத்திற்கும் உலகம் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காக சிறு விளக்கம் தேவைப்படுகிறது. இத்தனை உத்தமமான செய்திகளைக் கொண்ட கம்பனுடைய மகா காவியத்தின் சிறந்த கருத்துக்களெல்லாம் மக்களிடத்தில் தெளிவாகச் செல்ல வேண்டும். அந்த மாபெரும் காவியத்தின் நல்ல பலன்களையெல்லாம் தமிழ் மக்கள் பருக வேண்டும் என்று கருதி