பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ssiштыюплловдуiй идеяллооруй — s), «байыптоойт 29 தனது அன்புக்குரிய சகோதரர்கள், அறிவிலும், முழுமையான ஞானத்திலும் முதிர்ச்சி பெற்ற முனிவர்கள், இயற்கை சக்திகள், பக்தர்கள், வானரப் பெரும்படை, வீடணனும் அவனுடைய அமைச்சர்களும், தேவர்கள், பறவைகள் (ஜடாயு, கலுழன்) சமுத்திர ராஜன் மற்றும் வேறுளகுழுக்களும், இவ்வாறான அனைவரும் இராமபிரானுக்குத் துணையாக நிற்கிறார்கள். உலகில் நல்ல காரியங்களை நிறைவேற்றுவதற்கு பலருடைய துணையும் ஒத்துழைப்பும் நல்லாதரவும், நல்லாசியும் தேவைப்படுகிறது. ஒரு மாபெரும் காவியம் கம்பராமாயணம், வால்மிகி இராமாயணத்திற்கு அடுத்தபடியாக அதற்கு ஈடு இணையாகத் திகழும் ஒரு மாபெரும் காவியமாகும். அது ஒரு பெரும் பக்தி நூல். அது பாரத நாடெங்கும் சிறந்த பக்தி நூலாகப் பாராயணம் செய்யப்படுகிறது. பரதனும் இலக்குவனும், வீடணனும், சிறந்த இராம பக்தர்களாக, ஆழ்வார்களுக்கு நிகராகப் பாராட்டப்படுகிறார்கள் போற்றப்படுகிறார்கள். அனுமன் சிறந்த இராம பக்தன். இராம துரதன். இராமாயணப் பெருங் காவியத்தில் அனுமனுக்கு ஈடான ஒரு பாத்திரமில்லை. அனுமனைப் பற்றிக் குறிப்பிடும்போது, உயிர் போகும் தறுவாயில் இருந்த வாலி இராமனிடம், எனக்கு பதில் ஆற்றல் மிக்க அனுமனை உனக்குத் துணையாக வைத்துக் கொள். அனுமன் உனது தனுவுக்குச் சமமாகும். என்று கூறுகிறான். இராமபிரானே அனுமனை சொல்லின் செல்வன் என்று குறிப்பிடுகிறார். அந்தச் சொல்லின் செல்வன் அனுமன் ஆற்றிய அருஞ் செயல்களுக்கு நிகரில்லை. கடலைத் தாண்டியதும், சீதையைத் தேடிக் கண்டு பிடித்ததும், அவளுடன் பேசி அடையாளம் பெற்று இராமனிடம் திரும்பி வந்து அறிவித்ததும், சீதையைக் கண்டு விட்டுத் திரும்பிய போது அரக்கர்களோடு போரிட்டுப் பலரைக் கொன்றதும், இலங்கை மன்னனை சந்தித்ததும் தூது பேசியதும், இலங்கை மாநகரைத் தீக்கிரையாக்கியதும், யுத்தத்தின் போது, வடதுருவம் வரை சென்று