பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. sibLJmotusvorġśkör Leòrgpë# #p-H:ss" 30 சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து போர்க் களத்தில் மாண்டவர்களை எழுப்பியதும் போர்க்களத்தில் வீரசாகசங்கள் செய்ததும் ஆகிய அனைத்தும் பாரத மக்களுடைய உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகளாகும். எனவே அனுமனுடைய சிறந்த இராம பக்தியைப் பாராட்டும் வகையில் பாரத மக்கள், வைணவ கோயில்களில் அனுமனுக்கு என தனி சன்னதிகளும், அனுமனுக்கென தனிக் கோவில்களும் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். இராமாயணம் ஒரு சிறந்த பக்தி நூலாக நமது பூஜை அறைகளிலே வைத்துப் போற்றுகிறோம். இராமபிரானுடைய அவதாரப் பெருமைகளைப் பாராட்டி வழிபடுகிறோம். கம்பராமாயணம் தமிழ் மொழியில் அமைந்துள்ள மிகச் சிறந்த இலக்கிய நூலாகும். தமிழ் மொழியின் ஐந்திலக்கணங்களும் சிறப்பாக அமைந்த பெரு நூலாகும. ஏராளமான புதிய வளமான தமிழ்ச் சொற்களும், உவமைகளும், பல செய்திகளும் நிறைந்த பெருங்காவியமாகும். கம்பராமாயணம் தமிழ் மொழியைப் பெரும் அளவில் வளப்படுத்தியிருக்கிறது. பண்டிதர் முதல் பாமரர் வரை பாராட்டுதல் பெற்று தலை சிறந்த இலக்கிய நூலாக மக்களுடைய உள்ளங்களில் நிறைந்து நிலை பெற்றிருக்கிறது. இராமாயணம் பாரத நாடு தோற்றுவித்துள்ள மாபெரும் இதிகாசம் என்று புகழ் பெற்றிருக்கிறது. பாரத நாடு தோற்றுவித்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணமும், மகாபாரதமுமாகும். அவை இரண்டும் பாரதத்தின் இரு கண்கள். இராமாயணம் இராமனுடைய பூரணாவதாரத்தையும், மகாபாரதம் கிருஷ்ண பரமாத்வினுடைய பரி பூரணாவதாரத்தையும் அவர்களுடைய அருஞ்செயல்களையும் பெருமைகளையும் விளக்குவதாகும். வால்மீகி இராமாயணமும் இதர மொழிகளில் உள்ள இராமாயணக் காவியங்களும் தமிழில் உள்ள கம்பராமாயணமும்