பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பரசுராமனும்- 兰 சினிவாசன் 31 தலை சிறந்த காவியங்களாகும். சொல் நயம், பொருள் நயம், சந்தம், எதுகை, மோனை, கவிதைச் சிறப்பு ஒப்பீடுகள், இலக்கணம் ஆகியவைகள் நிறைந்த தலை சிறந்த காவியங்களாகும். பாராயணம் செய்ய வேண்டிய சிறந்த கவிதைகள் நிறைந்ததாகும். இந்த இரு இதிகாசங்களும் பாரத நாட்டின் சிறந்த கலாச்சாரச் சிறப்புகளை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாகும். கம்பராமாயணம் தமிழ் மொழியில் சிறப்பு மிக்கதொரு பெரிய பண்டித நூலாகும். தகுந்த ஆசிரியர்களை வைத்துப் பலகாலம் படித்துப் பயிற்சி பெற வேண்டிய பண்டித நூலாகும். இலக்கணச் சிறப்புகளும் நிறைந்த பாட நூலாகும். நமது கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் பாடமாக வைத்து படிக்க வேண்டியதும், ஆராய்ச்சி செய்ய வேண்டியதுமான அரிய பண்டித நூலாகும். இவ்வாறாக இராமாயணத்தைச் சிறந்த பக்தி நூலாக, மாபெரும் இலக்கிய நூலாக பாரத நாட்டின் பேர் இதிகாசமாக, தலைசிறந்த மகா காவியமாக, மிகப் பெரிய பண்டித நூலாக அதன் பன்முகத் தன்மைகளையும் படிக்கிறோம். பாராயணம் செய்கிறோம். இலக்கிய ஆய்வுகள் செய்கிறோம். அரசியல் காவியம் எல்லாவற்றிற்கும் மேலாக இராமாயணம் ஒரு பெரிய அரசியல் நூலாகவும் நாம் காண வேண்டும். இராமபிரானை முன்னுதாரணமாக வைத்து இராம ராஜ்யம் என்னும் கருத்து வடிவம் பாரத நாட்டு மக்களுடைய உள்ளங்களில் பதிந்திருக்கிறது. இராமாயண காலத்தின் அரசியலுக்கு அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகியவை அரசியல் களங்களாக அமைந்திருக்கின்றன. தசரதன், இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆகியோர், அயோத்தியின் அரசனும் அரச குமாரர்களுமாவார்கள். வாலியும் சுக்ரீவனும் கிட்கிந்தையின் அரசர்கள். இராவணன்,