பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ειbLJTummus or££&r usúrgps& &piussit 32 கும்பகருணன், வீடணன், இந்திரசித்தன், அதிகாயன், அட்சயகுமாரன் ஆகியோர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகித்த அரசனும் அரச குடும்பத்தினரும் அரச குமாரர்களுமாவர். இவர்களைத் தவிர மூன்று களங்களிலும் அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும், படைத்தளபதிகளும், தூதர்களும் வருகிறார்கள். அரசியல் அணுகும் முறைகளும் பேசப்படுகின்றன. இராமாயணக் கதையில் சக்திமிக்க ஆயுதங்களையும் படை பலத்தையும் பல வீரர்களையும் சந்திக்கிறோம். இராமன், இலக்குவன், கரன்துடணன், வாலி, கக்ரீவன், அனுமன், அங்கதன், வீடணன், மற்றும் இராமனுடைய அணியில் இருந்த வாணர வீரர்கள், இலங்கையில், இராவணன், கும்பகருணன், வீடணன், இந்திரசித்தன், அதிகாயன், அட்சயகுமாரன் மற்றும் பல இலங்கையின் வீரர்கள் ஆகியோர்களையும் அவர்களுடைய போர்களையும் வியூகங்களையும், உபாயங்களையும், சாகசங்களையும் காண்கிறோம். இராமாயணக் கதையில் இந்த வீரர்களைச் சந்திப்பதுடன், கதையின் நிகழ்ச்சிப் போக்குகளில் பல அரசியல் பிரச்னைகளையும் சந்திக்கிறோம். அத்துடன் அரசியல் நெறிமுறைகளைப் பற்றியும், ராஜநீதிப் பற்றியும் ஆட்சி முறைகளைப் பற்றியும் பல கருத்துக்கள் பேசப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும், போதிக்கப்படுவதையும் காண்கிறோம். எனவே இராமாயண மகாகாவியம் அடிப்படையில் அரசியல் மற்றும் சமூக நீதிக்காவியமாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.