பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரசுராமாவதாரம் பரசுராமர் திருமாலின் அவதாரமாகும். அதிலும் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றாகும். பிராமண குலத்தில் பிறந்து வீரமும் வேகமும் போர்க் குணமும் கொண்டவராக விளங்கிக் கடைசியில் சாந்தமடைந்து தன்னிடமிருந்த விஷ்ணு தனுசையும் தன்னுடைய தவ வலிமையையும் கல்யாண ராமரிடம் கொடுத்து விட்டு மீண்டும் தவம் செய்ய மலைக்குச் சென்றவர். இருசிக முனிவர் என்பவருக்குத் தன்னுடைய மனைவி சத்தியவதி மூலமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜமதக்கினி என்னும் பெயரிட்டனர். அவர் சிறந்த முனிவராக வளர்ந்து வந்த போதிலும் கூடித்திரியர்களுக்குரிய கோபம் வீரம் போன்ற குணங்களும் அவரிடம் இயல்பாக அமைந்திருந்தன. ஜமதக்கினி - ரேணுகா தேவி தம்பதியினருக்குப் பல புதல்வர்கள் பிறந்தனர். கடைசியாக ரீமன் நாராயண மூர்த்தியின் அம்சமாகப் பரசுராமர் பிறந்தார். அக்காலத்தில் கேகய நாட்டில் கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் பெயரில் கூடித்திரிய வம்சத்து அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த வல்லமையும் செல்வாக்கும் மமதையும் கொண்டு தன்னிகரில்லாமல் ஆட்சி நடத்தி வந்தான். கார்த்தவீரியார்ச்சுனன் தத்தாத்ரேய பகவானின் அருளால் ஆயிரம் கைகளையும், யாராலும் வெல்ல முடியாத பெரும் பலத்தையும் பராக்கிரமத்தையும் பெற்றிருந்தான். அத்துடன் இந்திரிய பலமும் கீர்த்தியும் ஏராளமான செல்வத்தையும் பெற்றிருந்தான். இதனால் அவன் எந்தவிதமான அச்சமும் தாட்சண்யமும் இன்றி பெரும் வீரனாய் உலகம் முழுவதும் சுற்றி வந்தான். தனக்கு நிகர் யாரும் இல்லை என்று கர்வமும் அகங்காரமும் கொண்டிருந்தான்.