பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணராமனும் பாசுராமனும்-அ-சீனிவாசன் 45 பரசுராமருடைய கோபம் தணியவில்லை. அரசர்கள் அறம் தவறி நடக்கிறார்கள் என்னும் கருத்து அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்தது. அரசர்கள் அனைவரின் மீதும் அரச குலத்தினர் மீதும் பரசுராமருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. பூமண்டலத்தில் இனி கூத்திரியர்களின் இராஜ வம்சமே இல்லாமல் அழிப்பேன்! என்று சபதம் செய்தார். பின்னர் பரசுராமர் அரசனுடைய அரண்மனையில் ராஜகுமாரர்கள் வைத்திருந்த தனது தந்தையின் தலையை மீட்டிக் கொண்டு வந்து தந்தையின் உடலுடன் ஒன்று சேர்த்தார். தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை முறைப்படிச் செய்து முடித்தார். அகால மரணமடைந்தத் தனது தந்தையின் பொருட்டுப் பரசுராமர் யாகம் ஒன்றினைச் செய்தார். பலவிதமான தான தர்மங்களைச் செய்தார். அதன் பலனாக ஜமதக்கினி முனிவர், ரிஷிகளுடைய மண்டலத்தையடைந்து சப்தரிஷிகளில் ஒருவராகி ஏழாவது நட்சத்திரமாய் விளங்கி வருகிறார். பரசுராமர் தான் செய்த சபதத்தின்படி இருபத்தியொரு தலைமுறை பூமண்டலத்தின் மீது படையெடுத்து கூடித்திரிய குலத்தைச் சேர்ந்த அரசர்களையெல்லாம் கொன்று அந்த அரசுகளை எல்லாம் காசிய முனிவருக்குக் கொடுத்து விட்டு அதன் பின்னர் அமைதியடைந்து என்றும் சிரஞ்சீவியாய் இன்றும் மகேந்திர மலையில் சாந்த கொரூபியாகத் தவம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இது பரசுராமருடைய சுருக்கமான வரலாறாகும். வியாச பகவான் அருளிச் செய்த பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களின் படி இங்கு பரசுராமருடைய சுருக்கமான வரலாறு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் பாகவத புராணத்தில் கல்யாண இராமனுடைய வரலாற்றைப் பற்றிக் கூறுமிடத்திலும் பரசுராமன் கல்யாண இராமன் சந்திப்பு பற்றிய செய்தி கூறப்பட்டிருக்கிறது.