பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்த பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்ற குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். மகா பாரதப் போர் நடந்திராது. பாரத தேசத்தில் பெரியதொரு கூடித்திரிய நாசமும் கலியும் வந்திருக்க மாட்டா. ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகளென மேலே குறிப்பிட்டுருப்பதை விளக்கும் பொருட்டு மகா பாரதப் போர் நடக்கும் முன்பாகவே முதற்படப் பாவம் பிராமணர்களுக்குள் புகுந்த தென்பதை நூல் தெரிவிக்கிறது” என்று பாரதியார் குறிப்பிடுகிறார். மகா பாரதப் போரில் ஏற்பட்ட கூடித்திரிய நாசம் பாரதியாரை மிகவும் பாதித்திருக்கிறது. அந்த கோரமான கூடித்திரிய நாசத்தை நினைத்து பாரதியார் பல தடவை வருத்தமடைந்திருக்கிறார். கண் கலங்கியிருக்கிறார். பாரத நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் பெரும் நாசங்களை ஏற்படுத்திய நான்கு வரலாற்று நிகழ்ச்சிகளை இங்கு நினைவில் கொள்ளலாம். ஒன்று கார்த்தவீரியர்ச்சுனன் காலத்தில் கூடித்திரியர்களிடத்தில் (அதாவது ஆட்சியாளர்களிடத்தில்) ஏற்பட்ட அகம்பாவம், கொடுங்கோன்மை, அழிச்சாட்டம், அதனால் நாட்டில் ஏற்பட்ட கொடுமைகள், அவைகளை எதிர்த்து அந்தணர்களிடம் ஏற்பட்ட ஆவேசம், பரசுராமன் இருபத்தியொரு தலைமுறை கூத்திரியர்களுக்கு எதிராக போர் செய்தது, அதனால் ஆயிரக் கணக்கான கூடித்திரியர்கள் மாண்டது, அதனால் ஏற்பட்ட கூடித்திரிய நாசம். அதன் பின்னர் பரசுராமன் தான் நடத்திய கொடுமையான பழி வாங்கும் செயலை நினைத்து வருந்தி அமைதியடைந்து மகேந்திர மலைக்குச் சென்று தவம் மேற்கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளைக் காண்கிறோம்.