பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகில் மாதவங்கள் செய்து ஒர் அருவரை இருந்தேன், ஆண்டைச் சிலையை நீ இறுத்த ஓசை செவியுறக் சீறி வந்தேன் மலைகுவன் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”. உலகில் உள்ள கூடித்திரிய மன்னர்களையெல்லாம் வென்று அந்தப் பூமியையெல்லாம் காசிப முனிவருக்குத் தானமாகக் கொடுத்து விட்டேன். என்னுடைய பகைவர்களையெல்லாம் ஒடுக்கினேன். அளவற்ற தவங்களைச் செய்து கொண்டு ஒரு மலையிலே அமைதியாகத் தங்கியிருந்தேன். அப்போது நீ மிதிலையில் ஒடித்த வில்லின் சத்தம் கேட்டுச் சீற்றம் கொண்டு வேகமாக உன்னிடம் வந்தேன். என்னுடன் போர் செய்வதற்கு உனக்கு வலுவும் துணிவும் இருக்குமாயின் இந்த வில்லை உன் கையில் வாங்கி வளைத்து நாண் பூட்டி என்னுடன் போர் செய்ய வருவாயாக என்று கூறினான். பரசுராமன் அவ்வாறு கூறியவுடன், “என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி நன்றொளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக என்னக் கொடுத்தனன் வீரன் கொண்டு அத் துன்று இரும் சடையோன் அஞ்சத் தோள் உற வாங்கிச் சொல்லும்” 'பூதலத்து அரசையெல்லாம் பொன்று வித்தனை என்றாலும்