பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. யுக சந்திப்பு 60 என்று கூறி பரசுராமன் கல்யாணராமனை வணங்கி அவனிடம் விடை பெற்றுக் கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்று மகேந்திர மலைக்குச் தவம் செய்வதற்காகச் சென்று விட்டான். பரசுராமன் போன பின்னர், இராமன் ஐம்புலன் உணர்வின்றிச் சோர்ந்து கிடந்தத் தன் தந்தையை எழுப்பித் துயர்க் கடலிலிருந்து கரையேற்றினான். பரிவும் இரக்கமும் இல்லாத அந்தப் பரசுராமனிடமிருந்து அந்த விஷ்ணு தனுசை வாங்கி அப்பரசுராமன் மீதிருந்த பழியை நீக்கிய இராமனை, தசரதன் கட்டித் தழுவி, உச்சி மோந்து மகிழ்ச்சியடைந்தான். இவ்வாறாக, கல்யாணராமன்-பரசுராமன் சந்திப்பு இராமாயண மகாகாவியத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு நிலை மாற்றமாகும். ஒரு யுக சந்திப்பாகும். சமுதாய வளர்ச்சியில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு ஏற்படும் வரலாற்று மாற்றமாகும். இதிலிருந்து பிராமணர்களுக்கும், கூடித்திரியர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பகையும், கசப்பும் நீங்குகிறது. ஒரு உடன்பாடும் சமரசமும் ஏற்படுகிறது. பரசுராமாவதாரத்தின் சக்தியனைத்தும் இராமாவதாரத்திற்கு முழுமையாக மாறுகிறது. கூடித்திரியர்கள் அரசர்களாக நீடிக்கும் வகையில், பிராமணனான பரசராமனின் சக்தியனைத்தும் கூடித்திரிய குலத்தில் பிறந்த ரீராமனிடம் வந்து சேருகிறது. அதன் பலனாக, வேதப் பயிற்சியும், தவ வலிமையும் அறிவாற்றலும் நிறைந்த அந்தணர்கள் அரசனுக்கு அவசியமான உரிய அமைச்சர்களாக இருந்து அரசனுக்குத் துணையாக இருக்கிறார்கள். அரசர்களும், அறிஞர்களும் சேர்ந்து நின்று சமுதாயத்திற்குத் தலைமையாகத் திகழ்கிறார்கள்.