பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நிறைவுரை 64 கார்த்த வீரியார்ஜுனன் கொல்லப்பட்ட பின்னர், அவனுடைய பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தனர். தங்கள் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்க எண்ணங் கொண்டனர். அவர்களுடைய கோபமும் ஆணவமும் ஆவேசமும் அதிகமாகி, ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு சமயம் பார்த்து ஆயுதங்களுடன் வந்து முனிவர் தியானத்தில் இருந்து கொண்டிருந்த போது, அவருடைய கழுத்தை வெட்டித் தலையை எடுத்துச் சென்று விடுகிறார்கள். புண்ணியத்துறைகள் ஆடப்போய் விட்டுத் திரும்பிய பரசுராமன் தனது தந்தையார் கழுத்து வெட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த ஆவேசத்துடன் மீண்டும் கார்த்த வீரியார்ஜுனனுடைய மக்கள் மீது படையெடுத்து அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு தனது தந்தையின் தலையை மீட்டிக் கொண்டுவந்து உடம்புடன் பொருத்தி தகனம் செய்து விட்டுச் சபதமேற்கிறான். அந்த சபதப்படி பரசுராமன் தவறு செய்த கூடித்திரியர்களை இருபத்தியொரு தலைமுறைகளின் அரசர்களைக் கொன்று அந்த அரசுகளையெல்லாம் காசிய முனிவர் என்னும் பிராமணரிடம் ஒப்படைத்து விட்டு அமைதியடைந்து மலைச்சாரலுக்கு தவம் செய்யச் சென்றுவிட்டார். அதனால் கூடித்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் அதாவது ஆட்சியாளர்களுக்கும், அறிவாளிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அரசியல் ஞானிகளுக்கும் இடையில் அடிப்படையில் பகையும் மனக் கசப்புகளும் ஏற்பட்டன. பரசுராமன் கையில் அவருடைய தெய்வீக ஆயுதமான பரசுடன், விஷ்ணு தனுசும் இருந்தது. ரீராமன் மிதிலையின் இருந்த சிவதனுசை வளைத்து ஒடித்த சப்தம் வனத்தில் மலையடிவாரத்தில் தவத்தில் அமைதியாக இருந்த பரசுராமனின் காதுகளில் விழுகிறது. மீண்டும் ஆவேசமடைந்து பரசுராமன் ஊழிக்காற்றின் வேகத்தில் தன் கையில் இருந்த விஷ்ணு தனுசுடன் ஒடோடி வந்து கல்யாணராமனை (கூடித்திரியனை) எதிர்த்து நிற்கிறான்.