பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UరUTర్ట్లు)|5)] 2 கலைப்பிரிவாக மட்டுமே காண்கிறார்கள் என்றும், அது உண்மையில் ஒரு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருந்த அறிவியல் தொழில் நுட்பத் துறையாகக் காணவேண்டும் என்றும், அதற்கான செய்திகளைக் கொண்ட பல நூல்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளனவென்றும் கூறினார். அத்துடன் விஸ்வகர்மா முதல் தொடர்ச்சியகத் தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையாக இந்தத் துறையில் பெரிய பல அறிவியல் மேதைகளும் இருந்து வருகிறார்கள் என்றும் கூறினார். இது போலவே இதர பல துறைகளிலும் வைத்தியம், மருந்தியல், கல்வித்துறை, உயர்கல்வி, வானவியல், கணிதம், காலக் கணிதம், ஜோதிடம், நீரியல், மண்ணியல், தாவரவியல், விலங்கியல், சமுத்திரவியல், பஞ்சபூத செயல்படு, ஒவியம் இசை, இசைக் கருவிகள், நாட்டியம், முதலிய பலவேறு துறைகளும் விஞ்ஞான தொழில் நுட்பமாகவும் அருங்கலைகளாகவும் நமது நாட்டில் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன. இவைகளைப் பற்றியெல்லாம் நமது பல்கலைக் கழகங்களும், அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுத் துறைகளும், அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இபமானப் பெருங்கதையில் சுந்தர காண்டத்தில், அனுமன், இலங்கையில் சீதையைக் கண்டுப்பிடித்துப் பேசிவிட்டுத் திரும்பிய பேது, இலங்கையில் காவுகளை சேதப்படுத்தியும், தன்னை எதிர்த்த பல அரக்கர்களைப் போரில் கொன்றும், பின்னர் இராவணனை அவனு ைய சபா மண்டபத்தில் சந்தித்தும் தூது பேசியும் திரும்பியபோது, அவனுடைய வாலில் இட்ட நெருப்பின் மூலம் இலங்கையை எரித்த செய்தி விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அனுமன் இட்ட நெருப்பினால் சேதப்பட்ட இலங்கையை முன்னைக் காட்டிலும் அழகாக விஸ்வகர்மயன் மூலம் இராவணன் புனர்நிர்மாணம் செய்ததாகக் கம்பராமாயணச் செய்திகள் கூறுகின்றன. மேலும், இராமாயணப் பெருங்கதையில் வானரத் தலைவர்களில் ஒருவனான சிறந்த தொழில் நுட்பஞானம் மிகுந்த நளன் என்னும் வானரத்தச்சன் தலைமையில் சேது அணை கட்டப்பட்டது பற்றியும்,