பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| II нын Ошным 3 மற்றும் சஞ்சீவி மலை அதன் அபூர்வமான மருத்துவ குணம் படைத்த மூலிகைகள் பற்றிய செய்திகளும் விமானங்கள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. இவ்வாறு பண்டைய காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரத நாட்டில் அறிவியல் தொழில் நுட்பமும் வளர்ச்சி பெற்றிருந்தது. அதில் தமிழகமும் தனது சிறப்பான பங்கை ஆற்றியிருக்கிறது. அதற்கு நமது பெரும் திருக்கோயில்களும், கோபுரங்களும், சிற்பங்களும் நமது பண்டய ஒவியங்களும், கல்லணைகளும் நீர்நிலைகளான ஏரிகளும், குளங்களும் அவைகளின் வரத்துக் கால்களும் வடிகால் முறைகளும் கடல் துறைகளும் தக்க சான்றுகளாகும். பாரதத்தின் நீண்ட நெடும் பாரம்பரியத்திற்கும் வளர்ச்சிப் பாதைக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும் அமைதியான வாழ்க்கைக்கும் செல்வச் செழிப்பிற்கும் தடையாகக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஏற்பட்ட படையெடுப்புகள், கொள்ளைகள், ஆக்கிரமிப்புகள் அன்னிய ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மை கொடுமைகள் காரணமாக பாரத சமுதாயத்தில் ஏற்பட்ட கடுமையான சேதங்களுக்கு அளவே இல்லை. அத்தகைய கொடுமைகளுக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் பலமான எதிர்ப்பு கொடுத்த போதிலும், அவ்வப்போது ஏற்பட்ட கூடித்திரிய நாசங்கள் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தின் விளைவாக அந்நிய ஆட்சிகள் பாரதத்தில் சில காலம் நிலைத்துவிட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியும் அவர்களுடைய தந்திரங்களும், கொள்ளைகளும், போர்களும், போர் கொலைகளும் நமது நாட்டில் பெரும் அளவில் நாசங்களை ஏற்படுத்திவிட்டன. பல லட்சக் கணக்கான மக்கள் போர்களினாலும், பஞ்சத்தினாலும், செத்து மடிந்தார்கள். நமது நாட்டுத் தொழில்கள் நீர் நிலைகள், விளை நிலங்கள் கோவில்கள், கல்விமுறை கலாச்சாரம் ஆகியவைகளெல்லாம் பெரும் அளவில் சேதமடைந்தன. ஆங்கிலேயேர்கள் நடத்திய ஆட்சியும் நிர்வாக முறையும், அவர்கள்