பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


103 பட்டுள்ளது. " திருநீறு இடா உருத்தீண்டேன் என்னும்' என்ற சுந்தரர் வாக்குக்கு இணங்கச் சிவபெருமானிடத் தில் பற்று, வழிபாடு முதலிய பண்பு உடையவர்களையே திருமணம் செய்துகொள்வோம் என்ற உறுதி திருவெம் பாவைப் பெண்கள் மாட்டு இருத்தலேக் கவனித்தல் வேண்டும். அன்றியும் காரைக்காலம்மையார் போன்று அடியார் வணக்கமும் அன்பர் பூசையும் வாழ்க்கைக் குறிக்கோளாக் கோடல் வேண்டும் என்று அப்பெண்கள் வாயிலாக மாணிக்கவாசகர் வற்புறுத்தி இருக்கிருர். 16 ஆவது பாட்டில் நாட்டு நலத்தின் பொருட்டு மழை பெய்தல் வேண்டுமென்று வேண்டிக் கோடலும் கூறப் பட்டுள்ளது. திருவெம்பாவை இருபது பாடல்களிலேயும் 'சிவபரத்துவமே வற்புறுத்தப் பெற்றுள்ளது. ஆதியும் அந்தமு மில்லா அரும்பெரும் சோதி” மாலறியா நான்முகனும் காணுமலே ' முன்னேப் பழம்பொருட்கும் முன்னேப் பழம்பொருள் " காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி ' விண்ணுகி மண்ணுகி இத்துணையும் வேருகி ' என்ற திருவெம்பாவைப் பகுதிகள் சிவ பரத்துவத்தைத் தெள்ளிதின் விளக்கும். சிவபெருமானே ஐந்தொழிலையும் செய்பவர் என்பது " போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்” என்ற இறுதிப்பாடல் விளக்கும். திருவெம்பாவை ஓதுதல் மார்கழித் திங்களில் திருமுறைகளே ஒதும் மரபில்லை; திருவெம்பாவை மட்டும் ஒதுவது மரபாக வந்துள்ளது. இங்ங்ணம் மார்கழித் திங்களில் மார்கழித் திருவிழாவில்