பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


14 பங்கு இவைகளை உடையவனுய் இருந்தவன், ஹாஸ்யன் விக்கிரமாதித்தன் அச்சனை ராசராச நாடகப் பெரியன் ஆவான். இராசராச நாடகப் பெரியன் என்ற பட்டம் இராசராச நாடகத்தில் இவனுக்கிருந்த பெரும் புலமையை விளக்கும். 27 நாடக சாலைகள் இதுகாறும் கூறியவாற்றல் ஆரியக் கூத்தும், தமிழக் கூத்தும், சாக்கைக் கூத்தும், சாந்திக் கூத்தும் கோயில்களில் திருவிழாக் காலங்களில் சிறந்த ஆடல் வல்லார்களால் நடிக்கப் பெற்றமை தெளிவாகும். இங்ங்ணம் ஆடல்கள் நிகழ்த்த அவ்வத் திருக்கோயில் களில் பெரிய நாடக சாலைகள் இருந்தன என்றும் கல்லெழுத்துக்கள் விவரிக்கின்றன. தி ரு வி ைட மருதூரில் ஒரு நாடகசாலை இருந்தது. அதில் அச் சபை யினர் கூடித் தங்கள் அலுவல்களை நடத்தினர் (199 of 1907; S. I. I. III and 157 of 1895 S. I. I. V, 721). அத்தாமன் ஐயாறனை கண்டதோள் கண்டப் பையன் என்பான் திருவதிகைத் திருக்கோயிலில் நாடகசாஜல மண்டபம் அமைத்து அதில் விளக்கு எரிக்க 96 ஆடுகளே அளித்த செய்தி உத்தம சோழனது 14 ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்து உணர்த்துகின்றது (398 or 1921). திருவாவடுதுறையில், ஒரு நாடகசாலை இருந் தது; அது நானுவித நாடகசாலை எனப் பெற்றது. அதனைப் பாதுகாத்தற்கு நிபந்தமும் அளிக்கப்பெற்றிருந் 26. மெய்ம்மட்டு-நட்டுவத்துக்கு மிருதங்கம் வாச கும் உரிமை. 27. இரண்டாம் திருமுறை-தருமபுர ஆதீனப் ப :பக்கம் 95. *