பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ சாலைகள் தோற்றுவாய் பண்டைத் தமிழர் மருத்துவக் கலையில் வல்லுநர் களாக விளங்கியிருந்தனர். அவர்களுடைய மருத்துவ அறிவுக்குத் திருக்குறள் மருந்து' என்ற அதிகாரமே சான்று பகரும். மருத்துவன் தாமோதரனுர் என்ற சங்கப்புலவர் சிறந்த மருத்துவராகத் திகழ்ந்திருத்தல் வேண்டும். சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்...' என்ற திருவள்ளுவமாலைச் செய்யுள் அவருடைய மருத் துவ அறிவினைத் தெற்றென விளக்கும். திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி முதலிய நூற்பெயர்கள் மருத்துவ அறிவின் அடிப்படையில் இடப்பெற்ற பெயர்களேயாம். = மருத்துவ அறிவு மாண்புற விளங்கிய தமிழ்மக்களைக் குறித்தும், அவர் மருத்துவத் தொண்டாற்றிய ஆதுலர் சாலைகளைக் குறித்தும், கல்லெழுத்துக்கள் பல செய்திகளை அறிவிக்கின்றன. மருந்துச் செடிகள் பச்சிலைகளாலே பல நோய்களைத் தீர்த்தனர் 5ն) ** பண்டை மருத்துவர்! “மருந்தாகித் தப்பா மரத்தற்ரு H என்ற குறட் பகுதி, மரங்களின் இலைகளும் பட்டை4ம் ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது.