பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


20 செய்தி அதிலிருந்து தெரியவருகிறது.’ அவ்வாதுலர் சாலையில் ஒராண்டுக்கு வேண்டிய மருந்து வகைகள் இருந்தன என்றும், ஒரு மருத்துவனும் சல்லியக்கிரியை பண்ணுவான் என்பானும் பரம்பரையுரிமையுடையோராய் மருத்துவம் செய்தனர் என்றும், நோயாளிகளுக்குத் துணையாக மருத்துவப் பணிமகளிர் பலர் இருந்தனர் என்றும் அறிகின்ருேம். இங்கிருந்த மருத்துவற்குக் கோதண்டராமன் அஸ்வத்தாம பட்டன் என்று பெயர்;. இவனும் ஒரு சவர்ணன் ஆவன். திருப்புகலூரில் தேவூருடையான் வேளான் மனதுக்கினியான் ஆன விராட ராசன் என்பான் திருப்புகலூரில் முடி கொண்ட சோழப் பேராற்றின் வடகரையில் ஆதுலர்க்கும் அளுதர்க்கும் வைத்தியஞ் செய்யவும் உணவு அளிக்க வும் ஒரு ஆதுலர்சாலேயும் மடமும் ஏற்படுத்தின்ை. கூடித்திரிய சிகாமணிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார், நரலோக வீரன் திருமண்டபத்தில் கூடியிருந்து கோயில் பண்டாரத்திலிருந்து தொகைபெற்று, நிலத்தை ஆதுலர் சாஜலப்புற இறையிலியாக விற்றனர். இதனை விக்கிரம சோழனின் 2ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்து அறி விக்கிறது. * கோவந்தபுத்துாரில் திருச்சி ஜில்லா கோவந்தபுத்துாரில் மூன்ரும் இராசேந்திர சோழனது 2ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 11. Page 310 of 3. Τ. T. I. Vol III, Part II. 12. 97 of 1928.