பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


39 காத்தற் பொருட்டும், அவருடைய குழந்தைகளின் நலன் பொருட்டும் திருவொற்றியூர்த் திருக்கோயிலில் தருமங் கள் செய்ய வழிவகை செய்ததை உணர்த்துகிறது. திருப்பள்ளியெழுச்சிக்காகவும், திருவாதிரைத் திருநாளில் திருவெம்பாவை விண்ணப்பிப்பதற்காகவும், நடித்தும் பாடியும் தொண்டு செய்துவந்த 22 தளியிலார்க்கும், ஒரு ஆடலாசானுக்கும், அகமார்க்கத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் 16 தேவரடியார்களுக்கும் ஊதியம் அளித்தற் பொருட்டு இந்நில வருமானம் ஒதுக்கப் பெற்றது. எனவே தேவரடியார்கள் திருப்பதியம் விண்ணப்பம் செய்தனர்-அதுவும் அகமார்க்கத்தில் நிகழ்த்தப் பெற்றது-அதாவது தேவாரங்களைப் பாடும் பொழுது சுவை பொருந்தச் சத்துவம் தோன்ற அபிநயத் தோடு பாடினர் என்று இக்கல்லெழுத்தினின்று அறியலாம். திருப்பாட்டு விசயநகர அரசர்களுள் ஒருவர் சர்ளுவ இம்மடி நரசிம்மன் என்பார். அக்காலத்தில் துளுவ சேனபதி நரசா நாயக்கரென்ருெருவர் இருந்தார். இந் நரசா நாயக்கரது ப னி ய | ள் ஈசுவர நாயகர் என்ற பெயருடையவர். இவர் (வட ஆற்காடு ஜில்லாவிலுள்ள) தேவிகா புரத்தில் திருமலாவுடைய நாயனுர் திருமுன் திருப்பாட்டு ஒதுவதற்கு நிபந்தம் அளித்ததாகத் தேவிகாபுரத்துக் கல்வெட்டொன்றில் (355 of 1912) காணலாம். இக்கல்வெட்டு சகரயாண்டு 1422-க் குரியது.

  • சோழ வளநாட்டு நடுவு மண்டலத்துப் பெரும்

பற்றப் புலியூர் நயினர் திருவம்பல முடைய நயினர் திருப்பூ மண்டபத்தாரில் திருவண்ணுமலைப் புலவர்