பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


54 ஆண்டாளின் தெய்வீக வரலாறு மக்கள் மனத்தை என்றுமே கவர்ந்துள்ளது ; இதற்கு இச்சாஸனம் சான்று பகரும். அன்றியும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய வற்றையும் திருமால் பக்தியில் சிறந்தோர் நன்கு அறிந்து போற்றினர் என்பதும் இதனுல் அறியலாம். இனிச் சகம் 1375 (கி. பி. 1453) க்குரிய கல்லெழுத் தும் (575 of 1926), சகம் 1399 (கி. பி. 1477) க்குரிய கல்லெழுத்தும் (578 of 1926) ஆண்டாளைச் சூடிக் கொடுத்த நாச்சியார் என்று குறிப்பிடுகின்றன. கி. பி. 1546 க்குரிய பராக்கிரம பாண்டியருடைய கல்லெழுத் தொன்றிலும் (580 of 1926) நாச்சியார் திரு. மொழிப் பாடற் பகுதிகள் காணப்படுகின்றன. திருப்பதியம் விண்ணப்பித்தல் உத்தரமேரூரில் கண்ட முதலாம் இராசேந்திரனின் 3 ஆம் ஆட்சியாண்டுச் சாஸனம் (181 er1923) ரீவைஷ் ணவர்கள் திருப்பதியம் விண்ணப்பித்தலைக் குறிப்பிடு கின்றது. வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயிலில் இராகவ தேவர் திருமுன் திருப்பதியம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், திருமாலுக்கு நிவேதிக்கப்பெற்ற போனகம் திருப்பதியம் விண்ணப்பிப்பாருக்கு அளிக்கப்பெற வேண்டும் என்றும் அச்சாஸனத்தில் கண்டிருக்கிறது. இங்குக்குறித்த திருப்பதியம் என்பது நாலாயிரப் பிரபங்தமே ஆகும். திராவிட வேதம் கிருஷ்ணதேவராயர் சகம் 1445 (கி. பி. 1523) இல் வடநாட்டிற் பெற்ற பெரு வெற்றிக்குப் பின் மகாமகத்தின்