பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


55 பொருட்டுக் கும்பகோணத்துக்குச் சென்ருர்; சென்று திரும்புங்கால் நாகலாபுரத்துக்கு விஜயம் செய்து அங்குத் திருமாலுக்குக் கோயில் எடுப்பித்தார். அக்கோயில் கைங்கரியங்களை நடத்துவதற்கும், ஆங்குத் திராவிட வேதமும் வேதாந்தமும் ஒதுவதற்கு, அவ்வரசர் பல ஆர்களே அளித்தார் என்று நாகலாபுரத்துச் சாஸனங்கள் Josušoffsirspor (627 and 628 of 1904; C. P. No. 12 of 1905). இங்குக் குறித்த திராவிடவேதம் என்பது நாலாயிரப் பிரபந்தம் என்று அறிதல் தகும். கிருஷ்ண தேவராயர் பரம பாகவதர் ; நாலாயிர பிரபந்தத்துள் இவர்க்கு மிக்க ஈடுபாடு இருந்தது. இவர் ஆண்டாள் வைபவங்களையெல்லாம் தொகுத்துச் சிறப்பாக ஒரு தெலுங்குக் காவியம் இயற்றியுள்ளார். அதற்கு ஆமுக்த மால்யதா என்று பெயர். திருவாய்மொழி மண்டபம் திருவல்லிக்கேணி ரீ பார்த்தசாரதி கோயில் முத லாழ்வார் மூவராலும் மங்களா சாஸனம் பெற்ற பழம் ப்ெருமையுடையது. இக் கோயிலில் சகம் 1486 (கி. பி. 1564)க்குரிய கல்வெட்டு ஒன்றில் திருவாய்மொழி மண்டபம் என்று ஒரு மண்டபம் கட்டப் பெற்றதாகக் (239 of 1903) காணப்பெறுகிறது. அருளாளப் பெருமாள் கோயில் சாஸனம் அருளாளப் பெருமாள் என்பது காஞ்சிபுரம் வரத ராஜப்பெருமாளேக் குறிக்கும். இங்குக் குறித்த சாஸனம் (33 of 1893 ; S. 1. I, III 80) விக்கிரம சோழனது 9 ஆவது ஆட்சியாண்டுக் குரியது. காஞ்சிபுரத்தில் திருவத்தியூராழ்வாரை (காஞ்சிபுரம் அருளாளப் பெரு மா8ள)ப் பொய்கையாரும் பூதத்தாழ்வாரும் பாடினர்